தொகுதி மறுவரையறையில் திமுகவுக்கு இருந்த 2 ஆப்ஷன்கள்! ஆதரிக்க முடிவு செய்தது ஏன்? விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்திருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் என்று ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்புத் தெரிவித்து வந்த திமுக, தற்போது இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்தது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், இந்த முடிவுக்கு பின்னால் தமிழகத்தின் மக்களவை தொகுதிப் பங்கை பாதுகாக்க வேண்டிய முக்கியமான கணக்கு இருப்பதாக திமுகவினர் கூறுகிறார்கள்.

இந்தியாவில் கடைசியாக 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மாநிலங்களுக்கான லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டது. மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் அதற்காக தங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழக்க கூடாது என்பதற்காக அப்போது தொகுதிகளை மாற்ற முடியாத வகையில் முடக்கப்பட்டது. இது வாஜ்யபாய் காலத்திலும் மீண்டும் 25 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டது.

Delimitation Bill stalin

தொகுதி மறுசீரமைப்பு

அந்த 25 ஆண்டுகள் என்பது டிசம்பர் மாதத்தோடு முடிகிறது. இதுவே இப்போது மீண்டும் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை விவாதமாக மாற்றியுள்ளது. இப்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய திட்டத்தின்படி, ஒவ்வொரு மாநிலத்துக்கும் தற்போதுள்ள லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையில் 50 சதவீதம் கூடுதலாக வழங்கப்படும். அதேநேரம் மாநிலங்களுக்கு இடையிலான தொகுதி பங்கு 1971 மக்கள் தொகை அடிப்படையிலேயே 2051ஆம் ஆண்டு வரை இருக்கும்.

இதன்படி தமிழகத்தின் லோக்சபா தொகுதிகள் 39ல் இருந்து 59 ஆக உயரும். உத்தப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் இதேபோல் 50 சதவீதம் கூடுதல் தொகுதிகள் கிடைக்கும். அதாவது லோக்சபா விரிவாக்கம் செய்யப்பட்டாலும், மாநிலங்களுக்கு இடையிலான தற்போதைய அரசியல் பிரதிநிதித்துவ விகிதம் மாறாமல் இருக்கும் என்பதே இதன் முக்கிய அம்சம். இந்த மசோதாவை ஏன் இப்போது திமுக ஆதரிக்கிறது என்பது குறித்து திமுக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

திமுக முன் உள்ள ஆப்ஷன்கள்

இந்த சூழலில், தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க திமுகவுக்கு இரண்டு முக்கியமான ஆப்ஷன்கள் மட்டுமே இருப்பதாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஆப்ஷன் 1- புதிய மசோதாவுக்கு ஆதரவு அளிப்பது. தற்போதைய திட்டத்துக்கு ஆதரவு அளித்தால், தமிழகத்தின் தொகுதிகள் 39ல் இருந்து 59ஆக உயரும். அதேநேரத்தில், லோக்சபாவிலும் தமிழகத்தின் தற்போதைய பிரதிநிதித்துவமான 7.2 சதவீதம் என்பது 2051 வரை பாதுகாக்கப்படும். இதன் மூலம் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காக தமிழகத்தின் அரசியல் செல்வாக்கு குறையாமல் இருக்கும் என்கிறார்கள்.

ஆப்ஷன் 2- இந்த திட்டம் நிறைவேறாமல் போனால், தற்போதுள்ள அரசியலமைப்பு நடைமுறையின்படி 2026க்கு பிறகு வெளியாகும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படும். அப்படி செய்யப்பட்டால், அதிக மக்கள் தொகை கொண்ட வட மாநிலங்களுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும். அதாவது இப்படி நடந்தால் லோக்சபாவில் மொத்த இடங்கள் 543ஆகவே இருந்தாலும் கூட தமிழகத்தின் தொகுதிகள் தற்போது உள்ள 39ல் இருந்து 7 முதல் 10 இடங்கள் வரை குறையும் என்கிறார்கள்.

திமுக வாதம்

இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர் பதிவிட்டிருந்த ட்வீட்டை, திமுகவின் டிஆர்பி ராஜா கூட ரீட்வீட் செய்திருந்தார். அதாவது புதிய மசோதாவில் சில சிக்கல்கள் இருந்தாலும் கூட அதை ஆதரித்தால் மட்டுமே தமிழகத்தின் தொகுதிகள் அதிகரிக்கும். மேலும், பிரதிநிதித்துவமும் பாதுகாக்கப்படும். அதேநேரம் எதிர்த்தால் மக்கள் தொகை அடிப்படையிலான மறுபங்கீடு செய்யப்படும்போது தற்போதைய பங்கு குறையும் அபாயம் உள்ளது என்பதே அவர்கள் வாதமாகும்.

சிக்கல் இருக்கு

50% அதிகரிப்பது ஓகே தான் என்றாலும் தொகுதி மறுவரையறை தொடர்பான விவாதம் இருக்கவே செய்கிறது. பாஜக தனக்கு சாதகமாக தொகுதி மறுவரையறை செய்யும்போது அது பெரிய சிக்கலாக மாறும் என்பதையே இப்போது கரப்பான் பூச்சி கட்சி உள்ளிட்டவை வலியுறுத்துகிறது. இந்த சிக்கலை திமுகவும் கூட ஒப்புக்கொண்டுள்ளது. இதனால் தான் அக்கட்சியின் எம்பி ஆ. ராசா, மசோதா வரும்போது இது குறித்தெல்லாம் ஆய்வு செய்வோம் என கூறியிருந்தார்.

இருப்பினும், தமிழகத்தின் தற்போதைய தொகுதி பங்கை பாதுகாப்பதை முதன்மையாக கொண்டு பார்த்தால், 50 சதவீத இட உயர்வுடன் 1971 விகிதத்தை தொடர்ந்து பாதுகாப்பதே சரியான ஆப்ஷனாக இருக்கும் என திமுக தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+