"இந்தியாவிற்கு குட்பை".. வங்கதேசத்துக்கு நடந்தே செல்லும் ஷேக் ஹசீனா? பரபரப்பான தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் இருந்து டிசம்பர் 16ம் தேதி வங்கதேசம் செல்வதாக அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அறிவித்துள்ளார். வங்கதேசத்தில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இதற்கிடையே தான் வரும் 16ம் தேதி இந்தியாவில் இருந்து வங்கதேசத்துக்கு ஷேக் ஹசீனா விமானம் அல்லது ஹெலிகாப்டரில் செல்லாமல் எல்லை வழியாக நடந்து செல்வது தொடர்பாக பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வங்கதேசத்தில் கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெரிய அளவில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவை நோக்கி திரும்பியது. இதையடுத்து அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டில் தஞ்சமடைந்தார். கடந்த 2 ஆண்டுகளாக ஷேக் ஹசீனா நம் நாட்டில் தான் இருக்கிறார்.

Sheikh Hasina

ஷேக் ஹசீனாவிற்கு தற்போது வங்கதேசத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் பதவியில் இருந்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது, 2024 வன்முறையில் போராட்டக்காரர்களை சுட்டு கொன்றது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என முந்தைய இடைக்கால அரசின் முகமது யூனுஸ் மற்றும் தற்போதைய பிரதமர் தாரிக்ரஹ்மானின் அரசு பலமுறை கோரிக்கை வைத்தும் நம் நாடு அதனை கேட்கவில்லை. இதற்கிடையே தான் ஷேக் ஹசீனாவே நாடு திரும்புவதாக அறிவித்துள்ளார். டிசம்பர் 16ம் தேதி இந்தியாவை விட்டு வங்கதேசம் செல்வதாக அறிவித்துள்ளார்.

டிசம்பர் 16ல் நாடு திரும்பியவுடன் ஷேக் ஹசீனா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார். அவரை பயங்கரவாதி போல் நடத்தப்படுவார் என வங்கதேச அரசு தெரிவித்துள்ளது. இது ஷேக் ஹசீனாவிற்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் தான் ஷேக் ஹசீனா டிசம்பர் 16ல் விமானம் அல்லது ஹெலிகாப்டரில் நாடு திரும்புவதற்கு பதில் இந்தியாவில் இருந்து நடந்தே இருநாடுகளின் எல்லையை கடந்து செல்வதற்கான திட்டம் உள்ளதாகவும், இதுபற்றி தீவிர பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஷேக் ஹசீனாவிடம் தற்போது பாஸ்போர்ட் இல்லை. இதனால் வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மான் அரசிடம், டெல்லியில் இருந்து வங்கதேசம் திரும்ப விமானத்தை அனுப்பி வைக்கும்படிஷேக் ஹசீனா கோரிக்கை வைத்தார். ஆனால் வங்கதேச அரசு ''ஷேக் ஹசீனாவை மீண்டும் அழைத்து வருவதென்றால் அவருக்கு கைவிலங்கு போடப்படும். இல்லாவிட்டால் கடும் கண்காணிப்பில் தான் அவர் அழைத்து வரப்படுவார்'' எனபதிலளித்தது. இதனை ஷேக் ஹசீனா விரும்பவில்லை.

இதனால் ஷேக் ஹசீனா இந்த முடிவு பற்றி ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா மாநிலங்களையொட்டிய சில எல்லை பகுதிகளை ஷேக் ஹசீனாவின் 'வங்கதேச அவாமி லீக்' கட்சி தலைவர்களும், ஆதரவாளர்களும் நேரடியாக ஆய்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு வங்கதேச எல்லையில் நுழைந்த உடன் அவரது ஆதரவாளர்கள் புடைசூழ ஷேக் ஹசீனா ஊர்வலமாக செல்வது பற்றியும் பரிசீலனை செய்து வருகிறார்.

குறிப்பாக பெட்ராபோல்-பெனாபோல் எல்லை பகுதியை தீவிரமாக ஆராய்ந்துள்ளனர். இந்த எல்லை பகுதி
என்பது மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது இந்தியா - வங்கதேசம் இடையேயான வர்த்தகம் மற்றும் மக்கள் நடமாட்டத்திற்கு முக்கிய இடமாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+