இனி சரிவுதான்..அவங்க தோண்டிய பள்ளத்துலயே திமுக விழுந்துட்டாங்க! எந்த பிரயோஜனமும் இல்ல.. வைகோ விரக்தி

Subscribe to Oneindia Tamil

மதுரை: தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் திமுக பாஜக ஆதரவு தந்துள்ள நிலையில், தாங்களே தோண்டி வைத்த பள்ளத்தில் திமுக விழுந்து விட்டது. திமுகவிற்கு சரிவு காலம் தொடங்கிவிட்டது என விமர்சித்துள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. மேலும், இனி யார் யாரைப் பார்த்தாலும் எந்த பிரயோஜனமும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

மதுரை பாண்டி கோவில் அருகே மதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி மகள் திருமண நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

Vaiko

அப்போது பேசிய அவர்," உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் நேற்று மாலை தீபம் ஏற்றப்பட்டது. பல ஆண்டுகளாக தர்காவுக்கு பக்கத்தில் தான் தீபம் ஏற்றப்பட்டு வந்தது. மரபுகளுக்கு மாறாக உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை தந்து இருக்கிறது.

இந்துத்துவா சக்திகள் தீபத் தூண் உச்சியில் தீபம் ஏற்றியது மிகவும் வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் தருகிறது. இந்துக்களும் இஸ்லாமியர்களும் சகோதரர்களாக வாழ்கின்ற இந்த மதுரை பகுதியில் அந்த ஒற்றுமையை சீர்குலைக்கும் வேளையில் ஈடுபட்ட சக்திகள் வெற்றி பெற்றிருக்கின்றன.

தீபச்சுடர் ஏற்றி வைத்தது மிகத்தை வருத்தத்தை தருகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் தனக்கு மனதுக்கு தோன்றியதையெல்லாம் தீர்ப்பாக தந்து வருகின்றனர். ஆனாலும், நீதிபதிகளை விமர்சிக்க விரும்பவில்லை.

தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் திமுக பாஜக ஆதரவு தந்துள்ளது. தாங்களே தோண்டி வைத்த பள்ளத்தில் திமுக விழுந்து விட்டது. திமுகவிற்கு சரிவு காலம் தொடங்கிவிட்டது. தேசிய கூட்டணி கட்சி தலைவர்கள் சோனியா ராகுல் மம்தா பானர்ஜி சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் சந்திக்க இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. யார் யாரைப் பார்த்தாலும் எந்த பிரயோஜனமும் இல்லை" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+