அமெரிக்காவுக்கு ஈரான் செய்த தரமான சம்பவம்! நடுவில் மாட்டிக்கொண்டு முழிக்கும் எலான் மஸ்க்!

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் தாக்குதல் தாக்குதல் நடத்தி வருகிறது. சுவாரசியம் என்னவெனில், இந்த தாக்குதலுக்கு எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவையை ஈரான் பயன்படுத்தியிருக்கிறது என்பதுதான். அதேபோல எலான் மஸ்கை ஏமாற்றி, ஸ்டார்லிங்க் தொழில்நுட்பத்தை அமெரிக்கா தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டதும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்த, ஸ்டார்லிங்க் இணைய சேவை பயன்படுத்தப்பட்டதை அறிந்து எலான் மஸ்க் கடுமையாக கோபமடைந்ததாக 'தி வாஷிங்டன் போஸ்ட்' செய்தி வெளியிட்டிருக்கிறது.

Iran

கடந்த பிப்ரவரியில்தான் அமெரிக்கா நேரடியாக களத்தில் குதித்தது. இஸ்ரேலுடன் சேர்ந்துக்கொண்டு ஈரானை அடி பொளந்து எடுத்துவிட்டது. எல்லாம் முடிந்தது என்று நினைத்தபோது.. ஈரான் எதிர்பாராதவிதமாக மீண்டு வந்து, இஸ்ரேல் மீதும் அமெரிக்க படைகள் மீதும் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியிருக்கிறது. மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கு ஏராளமான படைகள் இருக்கின்றன. இந்த படைகள் மீது ஈரான் சரமாரியாக அட்டாக் செய்திருக்கிறது. இதற்குதான் ஸ்டார்லிங்க் இணைய சேவையை பயன்படுத்தியிருக்கிறது.

பிப்ரவரியில் அமெரிக்கா தாக்க.. மார்ச் 1ம் தேதியன்று ஈரான் பதிலடி தாக்குதலை தொடங்கியது. குவைத்தில் உள்ள ஷுவைபா துறைமுகத்தில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 6 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஸ்டார்லிங்க் பயன்படுத்தப்பட்டிருப்பதாக சந்தேகம் எழுந்திருக்கிறது. இப்படி 2 முறை ஸ்டார்லிங்கை ஈரான் பயன்படுத்தியிருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், ஈரானில் ஸ்டார்லிங்க் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது என்பதுதான்.

அனுமதி மறுக்கப்பட்டிருந்தாலும், அமெரிக்க உளவு அமைப்புகள் சட்டவிரோதமாக ஸ்டார்லிங்க் டிவைஸ்களை ஈரானுக்குள் கடத்தி சென்றிருக்கின்றன. இப்படி கடத்தப்பட்ட டிவைஸ்களை ஈரான் ராணுவம் கைப்பற்றி, அதை தங்களுக்கு சாதகமானதாக மாற்றியிருக்கிறது. மொத்தத்தில்.. அவன் பொருளை எடுத்து அவனையே போட்டிருக்கிறது.

ஈரான் ஸ்டார்லிங்க் சேவையை பயன்படுத்தியது தொடர்பாக, அமெரிக்க பாதுகாப்பு செயலாளரிடம் ரகசிய அறிக்கை சமர்பிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த அறிக்கையை வைத்து அமெரிக்கா என்ன செய்யப்போகிறது? என்பதே கேள்வியாக இருக்கிறது.

போர்கள் என்றுமே நியாயமாக இருந்ததே இல்லை. நியாயவான்கள் எதுக்கு போர் நடந்தப்போறாங்க? அப்படி பார்த்தால் ஈரான் மட்டும் கிடையாது.. அமெரிக்காவும் போர் விதிகளை மீறியிருக்கிறது. அதாவது, ஸ்டார்லிங்கின் ராணுவ பதிப்பான 'ஸ்டார்ஷீல்டு' இணைய சேவையை அமெரிக்க சட்டவிரோதமாக பயன்படுத்தியிருக்கிறது. டிவி டிஷ் போல தட்டையாக பேனல் இருக்கும். இதைத்தான் டெர்மினல் என்பார்கள். இந்த 'ஸ்டார்ஷீல்டு' டெர்மினல்களை வைத்து, இன்டெர்நெட் இல்லாத பாலைவனம் போன்ற இடத்தில் கூட, செயற்கைக்கோள் மூலம் நேரடியாக இணைய வசதியை பெற முடியும்.

ஆனால், 'ஸ்டார்ஷீல்டு' என்பது தரைப்படைகளுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டன. இதற்கான கட்டணம் 5,000 டாலர் மட்டுமே. ஆனால், ட்ரோன்களை இயக்க தேவைப்படும் டெர்மினல்கள் 25,000 டாலர்கள் வரை வரும். அமெரிக்க ராணுவம் விலை குறைந்த 'ஸ்டார்ஷீல்டு' டெர்மினல்களை வாங்கி, அதை தற்கொலை ட்ரோன்களில் செட் செய்து பயன்படுத்தயிருக்கின்றன. ஸ்டார்லிங்க் நிறுவனத்தை பொறுத்தவரை இது விதிமீறல்தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+