அதிர்ஷ்டமும், ஆப்பும் கடக ராசிக்கு சேர்ந்து வருது.. இந்த வாரம் எந்த விஷயத்தில் கவனம் தேவை?
Rasi palan this week: நவம்பர் 30 ஆம் தேதி முதல் டிசம்பர் 6 ஆம் தேதி வரையிலான (கார்த்திகை 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை) இந்த வாரத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாகும். இந்த கிரக நிலை மாற்றமானது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த வாரம் நவம்பர் மாதம் நிறைவடைந்து டிசம்பர் மாதம் பிறக்கப் போகிறது. மாதத்தின் ஆரம்பத்திலேயே நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகு கேது பெயர்ச்சி வரும் 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில், கடக ராசியினருக்கு இந்த வாரம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.

கடகம் ராசி பலன்
கடக ராசியினருக்கு கண் சார்ந்த பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. சாப்பாடு விஷமாகும் தன்மை உள்ளதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை. உணவுக் குழாயில் அடைப்பு, விக்கல் போன்றவை ஏற்படும். பணம், நகை போன்றவற்றை கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும். மறந்து போய் ஏதாவது ஒரு இடத்தில் விட்டு வருவதற்கான வாய்ப்புள்ளது. போலியான விஷயங்களைப் பார்த்து ஆசைப்படுவீர்கள்.
பிரிவு ஏற்படும்
குடும்பத்தில் தாங்க முடியாத பிரிவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. பணம், பேச்சு, குடும்பம் தொடர்பான விஷயத்தில் 3 ஆம் தேதி காலை 10 மணி வரை கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளால் வெற்றி ஏற்படும் காலகட்டம். பிள்ளைகளால் கெளரவம் ஏற்படும். அவர்கள் ஆக்ரோஷமாக இருக்கக்கூடிய காலகட்டம். பெரியவர்களின் பயணம், ஆரோக்கியம், படிக்கட்டு ஏறுவது, கழிவறை, வங்கிகளுக்குச் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும்.
நல்ல காரியம்
தேவையில்லாத கோபம், ஆத்திரம், பயம் போன்றவை அதிகமாக இருக்கும். வீட்டில் பெரிய நல்ல காரியங்கள் நடக்கும். வாகனம், பசு மாடு, வீட்டிற்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் வாங்குவதற்கான யோகம் ஏற்படும். 3, 4 ஆம் தேதி எல்லா விஷயங்களும் தாமதமாக நடக்கும். மற்றபடி எந்த பாதிப்பும் ஏற்படாது. காமாட்சியம்மனுக்கு நெய் விளக்கு போடுவது ஏற்றத்தைத் தரும்.
ஆரோக்கியம்
வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. யோக பலத்தை பெறக்கூடிய காலகட்டம். தொழில், உத்தியோகத்தில் நிம்மதியும், ஏற்றமும் ஏற்படும். ரத்த அழுத்தம், சர்க்கரை, தலைசுற்றல் பாதிப்புகள் வரும் வாய்ப்புள்ளது. தோல் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. ஆயுர்வேதம், சித்த மருத்துவத்தைப் பயன்படுத்துவது நன்மை பயக்கும்.
வழிபாடு
பாதாள முருகன் வரழிபாடு ஏற்றத்தைத் தரும். விநாயகர் கோயிலுக்குச் சென்ற தோப்புக்கரணம் போடுவது நன்மை பயக்கும் சந்தோஷம் 85 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 65 சதவீதம் நன்றாக இருக்கும். கோளார் பதிகத்தை தினந்தோறும் ஒருமுறையாவது கேட்பது அற்புதமான நன்மையையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும்.


Click it and Unblock the Notifications
