நாம் விட்டுச் சென்றது பாலைவனம் அல்ல, சோலைவனம்! - செல்வப்பெருந்தகை சொன்னதை பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்திருந்தது, இந்தியா கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், இன்று ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க சென்னை வருகின்றனர். சூழல் இப்படி இருக்கையில், காங்கிரஸின் முன்னாள் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை x பக்கத்தில் போட்டிருக்கும் பதிவு கவனம் பெற்றிருக்கிறது.

"அற்ற குளத்து அறுநீர்ப் பறவைகளே! நாம் விட்டுச் சென்றது பாலைவனம் அல்ல; சோலைவனம் !" என செல்வப்பெருந்தகை பதிவிட்டிருக்கிறார். முன்னதாக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியிலிருந்து அவர் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Selvaperunthagai

திமுக-காங்கிரஸ் உரசல்

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில், திமுக-காங்கிரஸ் இடையே மோதல் வெடித்தது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் கூடுதல் தொகுதிகள் கேட்டபோது திமுக அதை திட்டவட்டமாக மறுத்துவிட்டது. சரி போகட்டும்.. ஆனால், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்றும் காங்கிரஸ் கேட்டிருந்தது. குறிப்பாக மாணிக்கம் தாகூர் இந்த கோரிக்கையை வெளிப்படையாக வைத்தார். அதை அப்படியே உள்ளபடியே.. மு.க.ஸ்டாலின் மறுக்க, இரு கட்சிகளுக்கும் இடையில் சலசலப்பு ஏற்பட்டது.

கொடுத்தால் ஆட்சியில் பங்கு.. இல்லையெனில் அணி மாறிக்கொள்கிறோம் என கதர் தலைவர்கள் துள்ளினார்கள். திமுக எதையும் கண்டுக்கொள்ளவில்லை. இருப்பினும், எல்லாவற்றையும் சரிகட்டி, பல்லை கடித்துக்கொண்டு தேர்தலை இந்த கூட்டணி எதிர்கொண்டது. தேர்தல் முடிவுகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் அமைந்துவிட்டது.

தவெக பெரும்பான்மை பெற.. சொல்லிக்கொள்ளாமல் அக்கட்சிக்கு முதலில் ஓட்டிச்சென்று ஆதரவு கொடுத்தது காங்கிரஸ். இதற்கு கை மாறாக 2 அமைச்சர் பதவிகளையும் காங்கிரஸ் பெற்றது. திமுக கூட்டணியில் இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் கட்சிகள் இருந்தன. ஆனால், இக்கட்சிகள் எல்லாம் கூட்டணி தர்மத்தை மதித்து, திமுகவுடன் கலந்து பேசி.. கூட்டணியை முறித்துக்கொண்டன. இந்த கூட்டணி முறிவில்.. காங்கிரஸ் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று நடந்துக்கொண்டதுதான் திமுகவை கடுமையாக அதிருப்தியடைய செய்தது.

இதன் தொடர்ச்சியாகத்தான் செல்வப்பெருந்தகை தனது தலைவர் பதவியிலிருந்து விலகினார். அவருக்கு பதில், மாணிக்கம் தாகூரை போட்டு, திமுகவை இன்னும் வெறுப்பேற்றியது காங்கிரஸ். இப்படி இருக்கையில் தொகுதி மறுவரையறை மசோதாவை தோற்கடிக்க திமுகவின் ஆதரவை காங்கிரஸ் இப்போது நாடியிருக்கிறது. மு.க.ஸ்டாலினை சந்திக்க ராகுல் காந்தி, செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் வருகின்றனர்.

இந்த பேச்சுவார்த்தைக்கு மத்தியில் செல்வப்பெருந்தகையின் ட்வீட் கவனம் பெற்றிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+