போட்டோ எடுத்துட்டு போங்க.. நிலைப்பாட்டில் மாற்றமில்லை! காங்கிரசை லெப்ட் ஹேண்டில் டீல் செய்யும் திமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: காங்கிரஸ் தலைவர்கள் இன்று சென்னை வந்து மு.க ஸ்டாலினை சந்திக்கும் நிலையில், திமுக தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வாய்ப்பே இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக இன்று வெறுமனே காங்கிரஸ் தலைவர்களுடன் புகைப்படம் எடுத்துவிட்டு பின்னர் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய பாஜக அரசு நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ள திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அறிவித்துள்ள நிலையில், அந்த முடிவை மாற்றக் கோரி ராகுல் காந்தி, சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று இரண்டு தனி விமானங்களில் சென்னைக்குப் புறப்பட்டுள்ளனர்.

சென்னை புறப்படும் முன்பு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட சமூக வலைதளப் பதிவுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சற்று முன்பு வெளியிட்டுள்ள பதில் ட்வீட் இந்திய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் காந்தியின் அழைப்பும், ஸ்டாலினின் நெத்தியடி பதிலும்!

முன்னதாக இன்று காலை ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், தமிழ் விரோத சக்திகளுக்கு எதிராகச் சகோதரர் ஸ்டாலின் எப்போதும் ஒரு பாறையைப் போல உறுதியாக நின்றுள்ளார். தேச நலனுக்காகவும், தமிழ்நாட்டின் நலனுக்காகவும், அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கவும் நாம் இணைந்து இந்த மசோதாவைத் தோற்கடிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

DMK unlikely to sccumb to the pressure of Congress and Rahul gandhi in Delimitation row

இதற்குப் பதிலளித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) பதிவில் கூறியிருப்பதாவது:

அரசியலமைப்புச் சட்டத்தையும், மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாப்பதில் திமுக ஆற்றி வரும் வரலாற்றுச் சிறப்புமிக்கப் பங்கை அங்கீகரித்த சகோதரர் ராகுல் காந்திக்கு எனது மனமார்ந்த நன்றி. தமிழ்நாட்டின் நலனையும், தமிழ் மக்களின் நலனையும் முதன்மையாகக் கொண்டே நாங்கள் எப்போதும் ஒவ்வொரு முடிவையும் எடுத்து வருகிறோம். இந்தப் பாதையில் நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்; வரலாறு எங்களைக் கட்டபொம்மன்களாகத்தான் மதிப்பிடுமே தவிர, எட்டப்பன்களாக அல்ல என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்!. என்று உறுதியாக கூறி உள்ளார்.

முடிவை மாற்றிக்கொள்ளுமா திமுக? அறிவாலய வட்டாரம் சொல்வது என்ன?

கடந்த காலங்களில் சில காங்கிரஸ் நிர்வாகிகள் திமுக தலைவர்களை எட்டப்பன் என விமர்சித்திருந்த நிலையில், இன்று ஸ்டாலின் பயன்படுத்தியுள்ள கட்டபொம்மன்களாகத்தான் இருப்போம், எட்டப்பன்களாக அல்ல என்ற வார்த்தைகள் அரசியல் வட்டாரத்தில் கூர்ந்து கவனிக்கப்படுகின்றன.

மேலும், டெல்லித் தலைவர்களின் இன்றைய சென்னை வருகை குறித்து திமுக மூத்த நிர்வாகிகள் முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளனர்

திமுக தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வாய்ப்பே இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மசோதா கொண்டு வரப்பட்டு, நேற்று திமுக எம்பிக்கள் கூட்டத்தில் அதிகாரப்பூர்வத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு இப்போது வந்து பேசுவதில் பயனில்லை. அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் இதற்கு முன்பே எங்களைத் தொடர்பு கொண்டிருக்க வேண்டும்" என திமுக தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சென்னை வரும் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களை மு.க.ஸ்டாலின் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசுவார்.. போட்டோ எடுக்கப்படும் .. அது வெளியிடப்படும்.. ஆனால், தமிழ்நாட்டின் 7.18% இடங்களைப் பாதுகாத்து, 2051-ம் ஆண்டு வரை மாநில விகிதம் மாறாது என்ற உத்தரவாதத்தைப் பெற்றுள்ள இந்த மசோதாவை ஆதரிக்கும் திமுகவின் முடிவில் எந்த மாற்றமும் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சந்திப்பை முடித்துக்கொண்டு, காங்கிரஸ் மற்றும் 'இந்தியா' கூட்டணித் தலைவர்கள் இன்று மாலை மும்பை சென்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரையும் சந்திக்கவுள்ளனர். இருப்பினும், ஸ்டாலினின் இன்றைய ட்வீட் மூலம், திமுக தனது முடிவில் உறுதியாக நிற்கப் போகிறது என்பது தெளிவாகிவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+