தமிழகத்தில் அதிகாரத்திற்கு வர ஆசைப்பட்டு.. டெல்லியில் கோட்டை விட்ட ராகுல்! அடித்து ஆடும் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற வேண்டும் என்பதால் காங்கிரஸ் எடுத்த முடிவு, இன்று தேசிய அரசியலில் அதன் கூட்டணி கணக்குகளை பாதித்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோர்த்து ஆட்சியில் பங்கு பெற்ற காங்கிரஸ், மறுபுறம் திமுகவுடனான நீண்டகால உறவை முறித்துக்கொண்டது. இந்த சூழலில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் திமுக எடுத்த முடிவை பார்த்து காங்கிரஸ் ஆடிப்போய் இருக்கிறது.

பல ஆண்டுகளாக ராகுல் காந்திக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே நிலவிய நெருக்கம், திமுக - காங்கிரஸ் கூட்டணியின் முக்கிய பலமாக கருதப்பட்டது. லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்முறையாக ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்ததே ஸ்டாலின் தான். அதேபோல ஸ்டாலினுக்கு இனிப்பு வாங்கி கொடுப்பது என ராகுல் காந்தியும் நட்பு பாராட்டினார்.

DMK Supports Delimitation Bill

திமுக- காங்கிரஸ்

ஆனால், 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பும், தேர்தலுக்கு பிறகும் காங்கிரஸ் கட்சிக்குள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற வேண்டும், அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும், மாநில அளவில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இது திமுக காங்கிரஸ் உறவை பாதித்தது மட்டுமின்றி, ஸ்டாலின்- ராகுல் காந்தி நட்பையும் பாதித்தது.

தேர்தலுக்கு முன்பே காங்கிரஸில் மாணிக்கம் தாகூர் தொடங்கி பல தலைவர்கள் திமுகவில் இருந்து விலகி தவெகவுடன் கூட்டணி அமைக்கவே விரும்பினர். ராகுல் காந்தியும் கூட அதற்கு க்ரீன் சிக்னல் கொடுத்ததாகவே சொல்லப்பட்டது. இருப்பினும், சோனியா காந்தி, ப சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்களின் கோரிக்கையை கேட்டே திமுக உடனேயே இணைந்து காங்கிரஸ் தேர்தலை எதிர்கொண்டது.

எல்லாமே மாறிவிட்டது

ஆனால், தேர்தல் முடிவு வந்தவுடன் எல்லாமே மாறியது. முடிவுகள் வெளியான உடனேயே விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்தது. ஆட்சியில் பங்கு பெற்ற காங்கிரஸுக்கு இரு அமைச்சரவை பதவியும் தரப்பட்டது.. இதனால் திமுக - காங்கிரஸ் உறவு முறிந்தது. நாடாளுமன்றத்திலும் இரு கட்சிகளின் எம்பிக்கள் தனித்தனியாக அமர்வோம் என சொல்லும் அளவுக்கு நிலைமை போனது.

இந்த சூழலில் தான் தொகுதி மறுவரையறை விவகாரம் மீண்டும் இப்போது அரசியல் சூழலை மாற்றியுள்ளது. இந்தியா கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியதால் தொகுதி மறுவரையறை திட்டம் குறித்து காங்கிரஸை பற்றி யோசிக்க வேண்டிய அரசியல் கட்டாயம் ஸ்டாலினுக்கு இல்லாமல் போனது. இதனால் தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரிப்பதாக அறிவித்து.

50% அதிகரிப்பு

புதிய திட்டத்தின்படி, அனைத்து மாநிலங்களிலும் லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிக்கப்படும். அதே நேரத்தில், 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையே தற்போது உள்ள மக்களவை இடங்களின் விகிதம் 2051 வரை பாதுகாக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது.. இதன் மூலம் தமிழகத்தின் லோக்சபா பிரதிநிதித்துவம் 7.18 சதவீதமாக தொடரும் என்றும் தற்போதுள்ள 39 தொகுதிகள் 59 ஆக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் வகையில் இருப்பதாக கூறி திமுக மசோதாக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

தமிழக தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே கூட்டணியை உடைத்து கொண்டு காங்கிரஸ் போனபோதே விமர்சனங்கள் எழுந்தது. ஏனென்றால் லோக்சபாவிலும் சரி, ராஜ்யசபாவிலும் சரி தவெகவுக்கு உறுப்பினர்கள் இல்லை. இதனால் மத்திய அரசு கொண்டு வரும் மசோதாக்களில் தவெக எடுக்கும் நிலைப்பாடுகள் அரசியல் ரீதியாக எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

காங்கிரஸுக்கு சிக்கல்

ஆனால், திமுக அப்படி இல்லை. லோக்சபாவில் 22 எம்பிக்களும், ராஜ்யசபாவில் 8 எம்பிக்களும் உள்ளனர். இதனால் 2029 லோக்சபா தேர்தல் வரை மத்திய அரசு கொண்டு வரும் மசோதாக்களில் திமுகவின் நிலைப்பாடு முக்கியத்துவம் பெறும். மேலும், இந்தியா கூட்டணியிலும் திமுக மிக முக்கிய பங்கு வகித்தது. இதனால் திமுகவை இப்படி பகைத்து கொள்வது சரியில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. அதுவே இப்போது நடக்க ஆரம்பித்துள்ளது. மாநிலத்தில் அதிகாரத்தை பெற விரும்பிய காங்கிரஸ் டெல்லியில் இப்போது தடுமாற ஆரம்பித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+