மாறாத அமித் ஷா ஸ்க்ரிப்ட்..அந்தர்பல்டி அடித்த திமுக? 8 மாசத்துக்கு முன்னாடியே சொன்னாரே! தவெக அட்டாக்
சென்னை: பாஜக கொண்டுவந்துள்ள தொகுதி மறுவரையறை மசோதாவில் திமுகவின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதால் அதற்கு ஆதரவளிப்பதாக திமுக கூறியுள்ளது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாட்டின் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவே மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியிருந்தார். அமித்ஷா பேசியது அப்படியே இருக்க திமுக மட்டும் அந்தர் பல்டி அடித்துள்ளது என விமர்சித்து வருகின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 82 மற்றும் 170வது பிரிவுகள் படி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகு தொகுதி சீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டு எல்லைகள் மறுவரை செய்யப்படுவது வழக்கம். ஆனால் 84ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின்படி 2026 வரை மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதி எண்ணிக்கையில் மாற்றம் செய்யாமல் இருக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அனைத்து மாநிலங்களிலும் மக்களவைத் தொகுதிகளை மறுவறை செய்ய தொகுதி மறு வரையறை மசோதாவை கடந்த ஏப்ரல் மாதம் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது பாஜக கொண்டு வந்தது.
தொகுதி மறுவரையறை
அப்போது தமிழக சட்டசபை தேர்தலும் அறிவிக்கப்பட்டிருந்தது. தொகுதி மறு வரையறை மசோதாவால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் எனவும், பாஜக தென் மாநிலங்களை திட்டமிட்டு புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக கூறி திமுக அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. தொடர்ந்து இந்த இந்தியா முழுவதும் அந்த வாதம் பரவியது. இந்தியா கூட்டணியில் இருந்த பெரும்பாலான கட்சிகள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. மாநிலங்களவையில் கொண்டுவரப்பட்ட மசோதாவும் தோற்கடிக்கப்பட்டது.
மு.க.ஸ்டாலின்
இந்நிலையில் நவம்பர் 30ஆம் தேதியான நாளை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் சென்னையில் நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்பி கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் தொகுதி மறு வரையறை மசோதாவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக நிலைப்பாடு
திமுகவின் கோரிக்கைகளை ஏற்று திருத்தப்பட்ட மசோதா கொண்டுவரப்பட்டிருக்கும் நிலையில் அனைத்து மாநிலங்களுக்கும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை ஒரே சீராக 50 சதவீதம் அதிகரிக்கப்படுவதாகவும், தமிழ்நாட்டின் தற்போதைய 7.18 பிரதிநிதித்துவ பங்கு பாதுகாக்கப்படுவதாகவும் அடுத்த 25 ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கு இடையிலான பிரதிநிதித்துவ விகிதம் தக்கவைக்கப்படுவதால் ஆதரவு அளிக்கப்படுவதாகவும், இது தமிழ்நாட்டுக்கு கிடைத்த வெற்றி என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
அமித் ஷா பேச்சு
இதே கருத்தை தான் சமூக வலைதளங்களிலும் திமுகவினர் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மக்களவையில் தொகுதி மறு வரையறை குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா பேசிய பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதாவது புதிய தொகுதி மறுவரையறை மசோதாவால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது எனவும், தமிழ்நாட்டின் தொகுதிகளின் எண்ணிக்கை 59 ஆக உயரம். தற்போதுள்ள 7.18 என்ற பிரதிநிதித்துவம் 7.23 ஆக அதிகரிக்கும் என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். ஆனால் அப்போது திமுக அதனை ஏற்கவில்லை.
என்ன நடந்தது?
பாஜகவின் இந்த முன்மொழிவு முன்மொழிவுக்கு எந்த உத்திரவாதமும் இடம்பெறவில்லை எனவும், இதனை ஏற்க முடியாது என திமுக பேசியிருந்தது. 8 மாதங்களுக்கு முன்பு அமித்ஷா பேசியது போல தற்போது தமிழகத்திற்கான எம்பிக்களின் எண்ணிக்கை 59ஆகவே அதிகரிக்கும் என்ற நிலையில், அப்போது எதிர்த்த திமுக இப்போது ஏன் ஆதரவு தருகிறது? இடையில் என்ன நடந்தது? என கேள்வி எழுப்பி வருகின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர்.




Click it and Unblock the Notifications
