ஒரே ராத்திரியில் அந்தர் பல்டி அடிச்சது யாரு? எட்டப்பன் காங்கிரஸா? திமுகவா? விட்டு விளாசிய ரகுபதி!
புதுக்கோட்டை: தமிழ்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 39 ஆக இருக்கக் கூடிய நிலையில் பழைய மசோதாவால் 31ஆக குறையும். இப்போது 51ஆக அதிகரிக்கவுள்ளது. 51 வேண்டுமா 31 வேண்டுமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். திராவிட முன்னேற்ற கழகம் தமிழர்களின் உரிமை தமிழ்நாட்டின் உரிமை விட்டுக் கொடுக்காது என திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். மேலும், சட்டசபை தேர்தல் முடிவுகள் வந்ததும், ராத்திரியோடு ராத்திரியாக அந்தர்பல்டி அடித்தது யார்? எனவும், காங்கிரஸ் தங்களை எட்டப்பன் என விமர்சிக்கலாமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுக்கோட்டையில் திமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், திருமயம் தொகுதியில் திமுக எம்.எல்.ஏ.வுமான ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்" தற்போது நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ள தொகுதி மறுவரை மசோதாவில் நியாயமான நிலைப்பாட்டை திமுக எடுத்துள்ளோம்.

தற்போது மக்களவையில் தமிழ்நாட்டின் விகிதாச்சாரம் 7.18 சதவீதம். தற்போதைய அந்த எண்ணிக்கை அதற்கு சற்றும் குறையக் கூடாது என்பதுதான் திமுகவின் முடிவு. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள வரையறை மசோதாவில் எங்களுக்கு கிடைத்த தகவலின் படி மாநிலங்களின் விகிதாச்சாரம் குறையவில்லை. கூடி தான் இருக்கிறது.
எஸ். ரகுபதி
அப்படி இருக்கும் போது தொகுதி மறுவரையறை மசோதாவால் எப்படி தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது என்பதை யோசிக்க வேண்டும். தமிழ்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 39 ஆக இருக்கக் கூடிய நிலையில் பழைய மசோதாவால் 31ஆக குறையும். இப்போது 51ஆக அதிகரிக்கவுள்ளது. 51 வேண்டுமா 31 வேண்டுமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். திராவிட முன்னேற்ற கழகம் தமிழர்களின் உரிமை தமிழ்நாட்டின் உரிமை விட்டுக் கொடுக்காது.
எட்டப்பன் காங்கிரஸ்
தமிழர்களைப் பாதுகாக்க இருக்கக் கூடிய இயக்கம் தான் திராவிட இயக்கம். ஒரே ராத்திரியில் அந்தர் பல்டி அடித்து, தோழமையோடு இருந்தவர்களுக்கெல்லாம் தெரிவிக்காமல், ஆதரவு கடிதத்தை கொடுத்தது காங்கிரஸ். எட்டப்பன் அவர்களா? நாங்களா? மற்றவர்களை பார்த்து எட்டப்பன் என்று சொல்வது எந்த வகையில் நியாயம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். எங்களுடைய கூட்டணியில் ஜெயித்த மற்றவர்களெல்லாம் சொல்லிட்டு போக காத்திருந்தார்கள். நாங்கள் சொல்லிக் கூட அனுப்பி வைத்தோம். ஆனால் எதுவுமே சொல்லாமல் ராத்திரியோடு ராத்திரியாக அந்தர்பல்டி அடித்தது யார்?
தொகுதி மறுவரையறை மசோதா
அந்தர்பல்டி அடித்தவர்களுக்கு பேசுவதற்கு என்ன யோக்கியதை உள்ளது. இந்தியாவில் தொகுதி மறுவரையறை வந்து தான் ஆக வேண்டும். தொகுதிகள் எல்லை வரையறை மாற்றப்பட வேண்டும். அதற்காக தொகுதி மறு வரையறை தேவை. பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை என்பதை தெளிவுபடுத்தி எங்களுடைய தலைவர் சொல்லியுள்ளார். இதற்கும் கூட்டணிக்கும் சம்பந்தமே கிடையாது.
திருமாவளவன்
திராவிட கருத்துக்களை ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒத்த கருத்துடைய கட்சிகளோடு கூட்டணி வைப்பமே தவிர..இது தேர்தலுக்கான கூட்டணி இங்கே கிடையாது. இது எங்கள் மனசாட்சிப்படி நாங்கள் கேட்ட கோரிக்கை. அந்த கோரிக்கை இன்று வெற்றி அடைந்திருக்கிறது. திருமாவளவன் நாடாளுமன்றத்தில் தொகுதி மறு வரை மசோதாவின் போது என்ன பேசினார் என்பதை அவர் மறந்து விட்டார். தோழமையெல்லாம் மாறிவிட்டதால் ஞாபக மறதி திருமாவளவனுக்கு அதிகமாகிவிட்டது. என்ன பேச வேண்டும் என்பதை அவர் நினைத்துப் பார்த்தால்.. அப்போது தான் அவருக்கு புரியும். அதுதான் அதிர்ச்சி அளிக்கும்.



Click it and Unblock the Notifications
