தென்னிந்தியாவில் எந்தெந்த கட்சிகள் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவு? எதிர்ப்பு? முழு லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு கொண்டு வரும் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு தென்னிந்தியாவில் உள்ள எந்தெந்த கட்சிகள் மத்திய பாஜக ஆதரவு தெரிவித்துள்ளன? எந்தெந்த கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன? என்பது பற்றிய விவரத்தை இங்கு பார்க்கலாம்.

delimitation-bill-which-parties-in-south-india-including-the-dmk-support-the-bill-here-is-the-fu

நாளை நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற உள்ளது. நாளை லோக்சபா கூடுகிறது. அப்போது மத்திய அரசு 3 முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய உள்ளது. நாடாளுமன்றம் - சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசியல் சாசன 132வது திருத்த மசோதா, மாநிலங்களுக்கான தொகுதி மறுவரையறை (இரண்டாவது) மசோதா 2026, யூனியன் பிரதேசங்களுக்கான தொகுதி மறுவரையறை மசோதா 2026 ஆகியவை தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதில் தொகுதி மறுவரையறை மசோதாவை எடுத்து கொண்டால் மக்கள் தொகை அடிப்படையில் இல்லாமல் அனைத்து யூனியன் பிரதேசங்கள், மாநிலங்களுக்கும் 50 சதவீதம் என்ற அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. அதன்படி தமிழகத்தில் தற்போதுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 59 ஆக உயர வாய்ப்புள்ளது.

அதுமட்டுமின்றி வரும் 2051ம் ஆண்டு வரை இந்த தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக முன்வைத்த 2 கோரிக்கைகளையும் (50 சதவீத அடிப்படையில் தொகுதியை உயர்த்துதல், 2வது 2051ம் ஆண்டு வரை தொகுதியில் மாற்றம் செய்வது கூடாது) மத்திய அரசு ஏற்றது. இதனால் திமுக இந்த மசோதாவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.

அதேவேளையில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்பட பிற இந்தியா கூட்டணி கட்சிகள் இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் தென்னிந்தியாவில் எந்தெந்த கட்சிகள் இந்த மசோதாவிற்கு ஆதரவு? எதிர்ப்பு நிலைப்பாட்டில் உள்ளன? என்பது பற்றிய விவரம் வருமாறு:

தென்னிந்தியாவை எடுத்து கொண்டால் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆந்திர முதல்வர் சந்திரபாப நாயுடுவின் தெலுங்கு தேசம், ஆந்திர துணை முதல்வராக இருக்கும் பவன் கல்யாணின் ஜனசேனா, மத்திய அமைச்சராக இருக்கும் கர்நாடகாவை சேர்ந்த எச்டி குமாரசாமியின் ஜேடிஎஸ், தமிழகத்தை சேர்ந்த அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

அதேபோல் பாஜக கூட்டணியில் இல்லாமல் 'இந்தியா' கூட்டணியில் செயல்பட்டு வரும் திமுக திடீரென்று ஆதரவு தெரிவித்துள்ளது. அதேபோ்ல் பாஜக, 'இந்தியா' கூட்டணியில் அங்கம் வகிக்காமல் தனித்து இயங்கும் ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி உள்ளிட்டவையும் இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

அதேவேளையில் இந்த மசோதாவிற்கு தமிழகத்தில் செயல்படும் திருமாளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாடு - கேரளாவில் செயல்பட்டு வரும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, வைகோவின் மதிமுக, புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி, கேரளா காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு நிலையில் உள்ளன.

இந்த பரபரப்புக்கு நடுவேயும் தமிழகத்தில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் தேமுதிக கட்சிகள் தங்களின் நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை. இதில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கமல்ஹாசன், தேமுதிகவில் பிரேமலதா விஜயகாந்தின் தம்பி சுதீஷ் ராஜ்யசபா எம்பியாக உள்ளனர். இருப்பினும் இந்த 2 கட்சிகளும் தங்களின் நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை.

தற்போது தமிழகத்தை ஆட்சி செய்யும் தவெகவை எடுத்து கொண்டால் தொகுதி மறுவறைக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளது. ஆனால் அந்த கட்சிக்கு லோக்சபா மற்றும் ராஜ்யசபா இரண்டிலும் எம்பிக்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+