சொன்ன வார்த்தையை காப்பாற்றிய யுவன்! நா. முத்துக்குமர் மகனுக்கு சினிமாவில் முதல் வாய்ப்பு
சென்னை: சினிமா பாடல்களை கேட்கும் போது அந்த இசையமைப்பாளரையும், பாடலாசிரியரையும் பிரித்து பார்க்க முடியாது. அப்படித்தான் யுவன் சங்கர் ராஜா இசையும் நா முத்துக்குமரன் வரிகளும் பல வருஷங்களாக நம் மனதில் ஒன்றாகவே பதிந்திருக்கிறது. காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி என அந்த கூட்டணி கொடுத்த பாடல்களை இப்போதும் பல ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது முத்துக்குமரன் மறைவுக்கு பிறகு அவருடைய மகனுக்கு யுவன் சங்கர் ராஜா வாய்ப்பு வழங்கி இருக்கிறார்.
மறைந்த பாடல் ஆசிரியர் நா முத்துக்குமார் மகன் ஆதவன் முத்துக்குமார் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் "ராஜாஸ் ப்ளே லிஸ்ட்" படத்தின் மூலப் பாடலாசிரியராக அறிமுகம் ஆக இருக்கிறார். அப்பா எழுதிய வரிகளுக்கு பல ஆண்டுகளாக இசையமைத்து வந்த யுவன் எப்பொழுதும் அவருடைய மகன் இப்போது வரிகளுக்கு இசையமைக்க போகிறார். இதை வெறும் புதிய பாடலாசிரியர் அறிமுகம் ஆகிறர் என்ற செய்தியாக மட்டும் பார்க்க முடியவில்லை.

மறைந்த நா முத்துக்குமார்
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு இசை கூட்டணியை நினைவுகளோடு தொடர்புடைய புதிய தருணம் இது. யுவன் முத்துக்குமார் கூட்டணி என்பது ஒரு சில ஹிட் பாட்டுகளோடு முடிந்துவிடவில்லை. 2001 இல் வெளியான நந்தா படத்தில் ஓராயிரம் யானை பாடலில் தொடங்கி, இவர்களுடைய பயணம் பல காதல் படங்களிலும் இளைஞர்களின் வாழ்க்கையோடு தொடர்புடைய படங்களிலும் தொடர்ந்து ரசிகர்களை ஈர்த்தது.
யுவன், நா முத்துக்குமார் கூட்டணி
75க்கும் அதிகமான படங்கள், 400க்கும் மேற்பட்ட பாடல்கள் என்று இவர்களுடைய கூட்டணி நீண்டிருக்கிறது. 2016 இல் நா. முத்துக்குமார் மறைந்த போது தமிழ் சினிமா ஒரு பாடல் ஆசிரியரை மட்டும் இழக்கவில்லை. எளிமையான வார்த்தைகளில் பெரிய உணர்வுகளை சொல்லக்கூடிய ஒரு கவிஞரை இழந்தது. சுமார் 1000 பாடல்களுக்கு மேல் எழுதியவர், இரண்டு தேசிய விருதுகளை பெற்றவர் என்று அவருடைய சாதனைகள் ஒரு பக்கம் இருந்தாலும், ரசிகர்கள் என்றைக்கும் அவரை நினைப்பது அவர் எழுதிய பாடல் வரிகளுக்காக.

யுவன் பேசியது
முத்துக்குமார் மறைந்த பிறகு அவருடைய குடும்பத்தினரை திரை உலகினர் மறந்துவிடவில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம். சிவகார்த்திகேயன் முத்துக்குமாரின் குழந்தையின் கல்விக்காக தனது பாடல் எழுதும் வருமானத்தை வழங்கி வருகிறார். இப்போது யுவன் சங்கர் ராஜா கொடுத்திருக்கும் இந்த வாய்ப்பு அதே தொடர்ச்சி பார்க்கப்படுகிறது. நா. முத்துக்குமார் தன்னுடைய இசை பயணத்தில் எவ்வளவு முக்கியமான நண்பர் என்பதையும் அவருடைய இடத்தில் வேறு யாராலும் நிரப்ப முடியாது என்பதையும் யுவன் ஏற்கனவே பேட்டிகளில் பேசி இருக்கிறார்.
மகிழ்ச்சி செய்தி
இப்போது ஆதவன் முத்துக்குமார் பாடல் ஆசிரியராக அறிமுகமாகும் படத்தில் யுவன் இசையமைப்பாளராக இருப்பது அந்த நட்பின் நினைவுகளை மீண்டும் ரசிகர்களிடம் பேச வைத்திருக்கிறது. அப்பா எழுதிய பாடல்களை கேட்டு வளர்ந்த ஆதவன் இப்போது அதே திரைத்துறையில் தனது முதல் பாடலை எழுத போகிறார். அதுவும் அப்பாவின் நெருங்கிய நண்பரும் அவருடைய நூற்றுக்கணக்கான பாடல்களில் இணைந்து பணியாற்றிய யுவன் இசையில் சில வாய்ப்புகள் ஒருவருடைய காரியத்தை தொடங்க வைக்கும். ஆனால் வாய்ப்புகள் அதற்கு பின்னால் இருக்கும் நினைவுகளால் இன்னும் பெரிய அர்த்தத்தை பெற்று விடுகின்றன. நா முத்துக்குமாரின் ரசிகர்களுக்கு ஆதவனின் இந்த அறிமுகம் நிச்சயம் ஒரு சந்தோஷமான செய்தியாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
