சகோதரரின் முதுகில் குத்திவிட்டு ஓடினீர்களே ராகுல் காந்தி.. நினைவிருக்கிறதா? திமுக தரமான பதிலடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினை, சகோதரர் என்று குறிப்பிட்டுள்ள ராகுல் காந்திக்கு திமுக ஐடி விங் பதிலடி கொடுத்துள்ளது. அதில், மிஸ்டர் ராகுல் காந்தி, நீங்கள் வெட்கமின்றி முதுகில் குத்திய சகோதரர் தான் ஸ்டாலின் என்று பதிவிட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் மீது திமுக தலைமை அதிருப்தியில் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக திமுக அறிவித்துள்ளது. இதனால் நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறும் சூழல் உருவாகி இருக்கிறது. திமுகவின் 2 முக்கிய நிபந்தனைகளை ஏற்று மசோதாவால் சேர்த்து கொண்டதால், மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கும் முடிவுக்கு திமுக வந்துள்ளது.

DMK

திமுகவின் இந்த முடிவால் ஒட்டுமொத்தமாக தேசிய அரசியலும், மாநில அரசியலும் மாறும் சூழல் உருவாகி இருக்கிறது. தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற்றப்பட்டால், 2029 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய சோதனை உருவாகும். இதனால் திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க காங்கிரஸ் கட்சியின் அகில தலைவர்கள் அனைவரும் சந்திக்க சென்னை வந்துள்ளனர்.

இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், தொக்யுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வலியுறுத்தி இந்தியா கூட்டணி மூத்த தலைவர்களுடன் மு.க.ஸ்டாலினை சந்திக்க சென்னை புறப்பட்டுள்ளோம். தமிழ் விரோத சக்திகளுக்கு எதிராக சகோதரர் ஸ்டாலின் எப்போதும் உறுதியாக எதிர்த்து நின்று வருகிறார்.

தேச நலனுக்காகவும், தமிழ்நாட்டின் நலனுக்காகவும் அரசியலமைப்பை பாதுகாக்கவும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த மசோதாவை தோற்கடிக்க வேண்டும் என்று பதிவிட்டிருந்தார். சட்டசபைத் தேர்தலின் போது ஸ்டாலினை சகோதரர் என்று குறிப்பிட ராகுல் காந்தி தவிர்த்தது விவாதப் பொருளாக இருந்தது. தற்போது மீண்டும் சகோதரர் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இதற்கு திமுக ஐடி விங் தரப்பில், மிஸ்டர் ராகுல் காந்தி, நீங்கள் வெட்கமின்றி முதுகில் குத்திய சகோதரர் தான் இந்த ஸ்டாலின் என்று பதிலடி கொடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சி மீது திமுக நிர்வாகிகளும், திமுகவினர் அதிருப்தியில் இருப்பது கண்கூடாக தெரிகிறது. இதனால் ஸ்டாலின் உடனான இந்த சந்திப்பு காங்கிரஸ் கட்சிக்கு மாற்றம் கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+