ராகுலிடம் என்ன டிமாண்ட் வைக்க இருக்கிறார் மு.க.ஸ்டாலின்? தவெகவுக்கு புதிய சிக்கலா?
சென்னை: தொகுதி மறுவரையறை விஷயத்தில் திமுகவை சமாதானப்படுத்த, ராகுல் காந்தி இன்று சென்னை வருகிறார். இந்நிலையில் ராகுலிடம், மு.க.ஸ்டாலின் என்ன மாதிரியான கோரிக்கையை வைக்க இருக்கிறார்? இது தவெகவுக்கு சிக்கலை ஏற்படுத்துமா? என்கிற கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
தொகுதி மறுவரை என்பது, சூறாவளிப்போல நாடாளுமன்றத்தில் வர இருக்கிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால்.. எதிர்க்கட்சிகளின் நிலை என்ன ஆகும்? என்பதே தெரியாது. எனவே இந்த விஷயத்தில் திமுகவை சமாதானப்படுத்த காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் மு.க.ஸ்டாலினை சந்திக்க சென்னை வருகின்றனர்.

தொகுதி மறுவரை பெரிய பிரச்சனை. இது அமலாகிவிட்டால், யார் நினைத்தாலும் சரி செய்ய முடியாது. பாதிப்பு கடுமையாக இருக்கும். இதுதான் காங்கிரஸின் நிலைப்பாடு. ஆனால், இந்த விஷயத்தை திமுக வேறு கோணத்தில் அணுகுகிறது.
தமிழகத்திற்கு பாதிப்பு இருக்க கூடாது. மக்களவையில் தமிழகத்திற்கு தற்போது என்ன பிரதிநிதித்துவம் இருக்கிறதோ! அதே பிரதிநிதித்துவம் தொகுதிமறுவரையறை கொண்டு வந்த பின்னரும் இருக்க வேண்டும். தமிழகம் மட்டுமல்லாது.. எல்லா மாநிலங்களுக்கும் சரிசமமாக 50% வரை தொகுதிகள் அதிகரிக்கப்படுகிறது எனில், பிரச்சனை இல்லை. இதுதான் திமுகவின் நிலைப்பாடு. பாஜக இந்த டிமாண்டை ஏற்றுக்கொண்ட நிலையில், மசோதாவுக்கு ஆதரவு என்று திமுக முடிவெடுத்திருக்கிறது.
திமுகவின் முடிவுக்கு பின்னால் காங்கிரஸ் மீதான அதிருப்தியும் முக்கிய காரணம். 2026 சட்டமன்ற தேர்தல் சமயத்திலும், தேர்தலுக்கு பிறகும் காங்கிரஸ் செய்த விஷயங்களை திமுக மறந்துவிடவில்லை. காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கும் இந்த மசோதாவுக்கு, திமுக ஆதரவு இருந்தால்.. மசோதாவை நிறைவேற்றுவது பாஜகவுக்கு எளிதான விஷயம். இதையெல்லாம் கணக்கு போட்டுதான் திமுக ஆதரவு நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறது.
தங்கள் தரப்பில் நியாயம் இல்லை என்றாலும் கூட.. திமுகவின் முடிவை, காங்கிரஸ் ஏற்கவில்லை. எனவே எப்படியாவது சமாதானப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் சென்னையில் முகாமிட தொடங்கியிருக்கின்றனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடான சந்திப்பில் என்ன பேசப்படும் என்பது கேள்வியாக இருக்கிறது. காங்கிரஸ் தலைவர்களிடம் ஸ்டாலின் ஏதாவது டிமாண்ட் வைப்பாரா? என்றும் சந்தேகம் எழுந்திருக்கிறது. ஒருவேளை தவெகவுக்கு காங்கிரஸ் அளித்துள்ள ஆதரவை வாபஸ் பெற கோரிக்கை வைக்கப்படலாம் என்றும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆனால் அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பு இல்லை என பத்திரிகையாளர் அரவிந்த் குணசேகர் கூறியுள்ளார்.
1. தவெக அரசுக்கான காங்கிரஸின் ஆதரவை வாபஸ் பெற திமுக வலியுறுத்தாது
2. தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஏன் ஆதரவளித்தோம் என்பது குறித்து, இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு திமுக விளக்கும்
3. பேச்சுவார்த்தையின் முடிவில், தவெக அரசுக்கான தனது ஆதரவை காங்கிரஸ் அப்படியே தொடரும்
4. பேச்சுவார்த்தை மீண்டும் காங்கிரஸ்-திமுக இடையே இணக்கமான உறவை ஏற்படுத்தும்
இதுதான் இந்த பேச்சுவார்த்தையில் நடக்கும் என்ற அரசியல் விமர்சகர்களும் கூறுகின்றனர். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு கூட்டணியிலிருந்து கழன்று சென்ற காங்கிரஸை, லெப்ட் ஹேண்டில் டீல் செய்ய திமுக திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.




Click it and Unblock the Notifications
