தொகுதி மறுவரையறை! சோனியா, கார்கேவை சந்திக்க நேரம் கொடுத்த மு.க.ஸ்டாலின்! சென்னை விரையும் கனிமொழி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக நிபந்தனை ஆதரவு என்ற அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் கட்சி தலைமை, இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் நேரம் கேட்டிருந்தனர். ஸ்டாலினும் அவர்களை சந்தித்த ஒப்புதல் அளித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நாளை தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. நியாயமான தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என திமுக ஆரம்பரத்தில் இருந்தே வலியுறுத்தி வந்தது. அதிலும் குறிப்பாக ஸ்டாலின் சொன்ன 2 நிபந்தனைகளை ஏற்று மத்திய அரசு, தொகுதி மறுவரையறை மசோதாவில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.

இதனால் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியாக,மக்களவைக்கு 50 சதவீத தொகுதிகள் அதிகரிக்கும் என்பதால் இந்த மசோதாவுக்கு நேற்றைய தினம் திமுக நிபந்தனை ஆதரவை அளித்திருந்தது.

Stalin

சரத்பவார்

திமுகவை போல் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் (சரத்பவார்) மசோதாவுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்தியா கூட்டணியில் இருந்த திமுக, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் இந்த முடிவால் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

இதையடுத்து எப்படியாவது இவர்களது முடிவை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, சோனியா, மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் சரத்பவாரையும் ஸ்டாலினையும் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பை செல்லும் கார்கே

முதலில் மும்பை சென்று அங்கு தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் NCP-SP) கட்சித் தலைவர் சரத்பவாரை சந்தித்து தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கவுள்ளனர். இதைத் தொடர்ந்து இன்று பிற்பகல் திமுக தலைவர் ஸ்டாலினையும் சந்திக்கிறார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழா

கடந்த 10 நாட்களுக்கு முன்பு சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு திமுக தலைவர் ஸ்டாலினை அழைக்க சோனியா காந்தி தொலைபேசியில் முயற்சித்தாராம். ஆனால் ஸ்டாலின், தான் பிஸியாக இருப்பதாக கூறி போன் அழைப்பை தவிர்த்ததாக சொல்லப்படுகிறது.

ஸ்டாலின் விளக்கம்

இதுகுறித்து ஸ்டாலின் ஒரு முறை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு எனக்கு முறையான அறிவிப்பு வரவில்லை. எனது உதவியாளரை தொடர்பு கொண்டுதான் அழைத்தார்கள்" என கூறியிருந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் இன்று சென்னை வரும் கார்கே உள்ளிட்டோரை, ஸ்டாலின் சந்திக்க ஒப்புக் கொள்வாரா என்பது கேள்விக்குறியாக இருந்தது. இந்த நிலையில்தான் ஸ்டாலினிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் நேரம் கேட்டனர். அப்போது சோனியா காந்தியும் வருவதால் ஸ்டாலின், அந்த தலைவர்களை சந்திக்க ஒப்புதல் அளித்துவிட்டார். சோனியாவை, முன்னாள் முதல்வர் கருணாநிதி தனது மகளாக கருதியநிலையில், அவர்கள் இருவருக்கும் இருந்த அந்த பாசப்பிணைப்பு, சகோதரி என்ற முறையில் ஸ்டாலினுக்கும் இருக்கிறது. கடந்த 2026 சட்டசபை தேர்தலின்போது கூட திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற சோனியா சம்மதம் தெரிவிக்கவில்லை என கூறப்பட்டது. மேலும் இந்தியா கூட்டணி தலைவர்கள், திமுக தலைவரை சந்திக்கவுள்ளதால் திமுக எம்பி கனிமொழி டெல்லியில் இருந்து சென்னைக்கு விரைகிறார்.

லோக்சபா பலம்

நாடாளுமன்ற மக்களவையில் மொத்த எம்பிக்களின் எண்ணிக்கை 543 ஆகும். இதில் 3 இடங்கள் காலியாக உள்ளன. எனவே மொத்தமுள்ள 540 இடங்களில் 2/3 என்றால் 360 வருகிறது. எனவே தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற 360 எம்பிக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த 360 எம்பிக்களில் சிலர் அவைக்கு வராமல் இருக்கவும் சிலர் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருக்கவும் வாய்ப்புள்ளது என்பதால் இந்த 360 என்ற எண்ணிக்கை மாறுபட வாய்ப்புள்ளது.

தற்போது மக்களவையில் திமுகவின் பலம் 22, சரத்பவாரின் கட்சிக்கு 8 ஆகும். ஏற்கெனவே இந்தியா கூட்டணியிலும் பாஜக கூட்டணியிலும் இல்லாத பிஆர்எஸ் (ராஜ்யசபா 3), ஒய்ஆர்எஸ் (லோக்சபா 4), பிஜு ஜனதா தளம் (ராஜ்யசபா 5) ஆகியவை மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+