அனிருத்க்கு நடந்த அதே சம்பவம்.. TTF வாசனை வைத்து வரும் விமர்சனம்! விஜய் சேதுபதி நறுக்குனு கேட்ட கேள்வி
சென்னை: சமீபத்தில் அனிருத் திருமண ரிசப்ஷன்னை பார்த்த பிறகு சோசியல் மீடியாவில் இருந்த அதே விமர்சனம் தான் இப்போ டிடிஎஃப் வாசன் விஷயத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. அதாவது அனிருத் கல்யாணத்தில் எத்தனையோ பேர் வந்திருந்தாலும் வராத தனுஷ், சூர்யா பற்றிய கேள்விதான் அதிகமாக இருந்தது. அதே விஷயத்தை வாசனும் செய்திருக்கிறார். இதனால் கடுப்பான விஜய் சேதுபதி நேற்று எபிசோடில் கேள்வி கேட்டிருக்கிறார். ரசிகர்கள் அதை பாராட்டி வருகிறார்கள்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இதனாலயே போன வாரத்தில் பேமிலி ரவுண்டு நடைபெற்றது. இது ஒவ்வொரு சீசனிலும் வழக்கமாக நடக்கும் சம்பிரதாயம் தான். நிகழ்ச்சி முக்கால்வாசி கட்டத்தை தாண்டி பிறகு குடும்ப உறுப்பினர்களை வரவைத்து உள்ளே அழுகாட்சி, சென்டிமென்ட், காதல், மோதல் என எல்லாவற்றையும் களைகட்ட வைத்து விடுவார்கள். அதே போல இந்த சீசனிலும் முயற்சி செய்திருந்தார்கள். இது ஓரளவுக்கு சக்சஸ் ஆகி இருக்கிறது.
பிக் பாஸ் அப்டேட்
ஆனாலும் டிடிஎஃப் வாசன் செய்வது தான் இப்போ இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியது. வாசனுக்கு பிக் பாஸ் வீட்டிற்கு போவதற்கு முன்பே அதிகமான சப்போர்ட் இருக்கிறது. ஆனால் உள்ளே போன பிறகு வாசன் நடந்து கொண்ட விதம் மேலும் அதிகமாக ரசிகர்களையும் பெற்றது. ஏற்கனவே இவர் அதிகமாக சர்ச்சைகளில் சிக்குவதை பார்த்து இவரை வெறுத்தவர்கள் கூட இந்த பையன் நல்ல பையனா தான் பா இருக்கிறான், ரொம்ப எதார்த்தமாக இருக்கிறானே? என்று அவருக்கு சப்போர்ட்டும் கூடிவிட்டது.

நண்பனை தேடிய வாசன்
ஆனால் அவருடைய அம்மாவும், மனைவியும் உள்ளே வந்த பிறகு அவர்களை வரவேற்று அவர்களிடம் சந்தோசமாக பேசுவார் என்று எதிர்பார்த்தால், அவர் வராத தனது நண்பனை பற்றி கேட்டுக்கொண்டு இருக்கிறார். அதுவும் ஒருமுறை, இரண்டு முறை அல்ல பலமுறை கேட்டுக்கொண்டே இருந்தார். இது பார்க்கும் ரசிகர்களை கடுப்பாக்கி விட்டது. உனக்கு நண்பன் முக்கியமாக இருந்தாலும் உன்னை பெற்றவளும், உன் மனைவியும் வந்திருக்கிறாங்க. அவங்களுக்கும் ஆனா முக்கியத்துவத்தையும் கொடுக்க வேண்டுமே, அவர்கள் மனம் புண்படும்படி மீண்டும் மீண்டும் அவர்களிடம் தனது நண்பனை பற்றிய கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இணையத்தில் விவாதம்
ஒரு கட்டத்தில் அவருடைய மனைவி கூட கோபபபட்டு விட்டார். அப்போது கூட அவரை சமாதானப்படுத்தி இருந்தாலும், கடைசியில் என் நண்பன் வந்திருந்தால், எனக்கு எப்படி விளையாட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்திருப்பார் என்று சொல்கிறார். இது தேவையில்லாத மனக்கசப்பை தானே ஏற்படுத்தி இருக்கும் என்று சோசியல் மீடியாவில் பலரும் பேசிக் கொண்டிருந்தனர். அதை நேற்றைய எபிசோடில் விஜய் சேதுபதியும் வாசனிடம் கேட்டிருந்தார்.
விஜய் சேதுபதி அட்வைஸ்
விஜய் சேதுபதி வாசனுக்கு அட்வைஸ் ஆகவும் சொல்லியிருந்தார். நண்பன் முக்கியம்தான் அதற்காக சொந்த அம்மாவையும், மனைவியையும் அவமானப்படுத்துவது போல மீண்டும் மீண்டும் நீங்க நண்பனை பற்றிய கேட்டுட்டு இருக்கீங்களே என்று விஜய் சேதுபதி கேட்க, அப்போது மக்களும் கைதட்டியதுவும் வாசனால் எந்த பதிலும் பேச முடியாமல் அமைதியாகவே இருந்தார். இனியாவது அவருக்கு புரிய வேண்டும் என்பதுதான் பலருடைய கருத்தாக இருக்கிறது.




Click it and Unblock the Notifications
