பிக் பாஸை விட்டு அதிரடியாக வெளியேற்றப்படும் நபர்.. ஜேசன் இல்ல! TTF வாசன் முயற்சி வீணாகபோச்சு
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் யார் வெளியே அனுப்பப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் அதில் பெரிய போராட்டத்தை சந்தித்து பிக்பாஸ் வீட்டிற்குள் தாக்கு பிடித்துக் கொண்டிருந்த ஒரு போட்டியாளர் வெளியேற்ற போவதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதுவும் இந்த வாரம் ரெட் கார்டு கொடுத்து ஜேசன் வெளியேற்றபடுவார் என்ற பலரும் எதிர்பார்த்து இருந்த நிலையில் அது ஏமாற்றமாகவே போய் இருக்கிறது.
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்குள் பிக்பாஸ் குரல் இல்லாத வாரம் என்று புதிய டாஸ்க் வைத்திருந்தனர். பிக் பாஸ் ஒரு வாரம் தீபாவளி லீவு எடுத்துவிட்டு வீட்டுக்கு போய்விட்டார் போல. அதனாலயே உள்ளிருக்கும் போட்டியாளர்களில் ஒருவரை தேர்வு செய்து அவரை வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியை கொண்டு போகலாம் என்று முடிவு எடுத்து விட்டார்கள். ஆனால் வழக்கம் போல இந்த டாஸ்கிலும் சண்டை சஞ்சரவுக்கு பஞ்சமே இல்லாமல் தான் போய்க்கொண்டிருந்தது.
அடிக்க பாய்ந்த ஜேசன்
அதிலும் ஒரு கட்டத்தில் டிடிஎஃப் வாசனை ஜேசன் அடிக்க பாய்ந்து அனைவருக்குமே பயத்தை கொடுத்துவிட்டார். அப்போது அந்த சம்பவத்தை நேரில் பார்த்துக் கொண்டிருந்த லட்சுமி பிரியா காதை பொத்திக்கொண்டு பயந்து போய் நின்று கொண்டிருந்தார். அவர் ஏற்கனவே ஆனந்தியுடன் அடாவடியாக சண்டை போட்டு ஆர்ப்பாட்டம் செய்தவர். அவரே பயப்படற அளவிற்கு வாசனும் ஜேசனும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து, அடிக்க பாய்ந்து ரகளை செய்து விட்டார்கள். இதனால் இவர்களில் யாருக்கு இந்த வாரம் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு தான் ரசிகர்களுக்கு இருந்தது.
பிக் பாஸின் மாஸ்டர் பிளான்
ஆனால் நீங்க நினைக்கிறதை எல்லாம் நாங்க பண்ண மாட்டோம், நாங்க உங்களுக்கு பிக் பாஸ் என்று இவர்கள் இப்போது நிரூபித்து விட்டார்கள் போல. அதாவது இந்த வாரம் வாக்குகளின் அடிப்படையில் பார்க்கும்போது முத்தழகு, ஷாதிகா, முகேஷ் 3 பேரும் தான் இருக்கிறார்கள். ஆனால் இவர்களில் முகேஷ் தான் இந்த வாரம் வெளியேற்றப்பட போவதாக நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது. ஏற்கனவே முகேஷ் 2 வாரத்திற்கு முன்பே வெளியேற்றப்பட வேண்டியவர். அப்போது தன்னிடம் இருந்த நாமினேஷன் ஃப்ரீ பாஸை வைத்து முகேஷை காப்பாற்றி இருந்தார்.

காப்பாற்றிய வாசன்
காரணம் அந்த வாரத்தில் முகேஷை வாசன் பிடித்து தள்ளி இருந்தார். அப்போது பெரிய சண்டை ரகளையே நடந்தது. அந்த சமயத்தில் கூட ரம்யா கிருஷ்ணன் வாசனுக்கு வார்னிங் கொடுத்து இருந்தார். அப்போது வாசன் எல்லாரிடமும் பேசும்போது முகேஷ் நாமினேஷனில் இருந்தால் நான் அவனை என்னிடம் இருக்கு பாஸை வைத்து காப்பாற்றுவேன் என்று சொல்லி இருந்தார். அதேபோல அவர் நாமினேஷனில் இருக்கும்போது அவரை காப்பாற்றி விட்டார். ஆனால் இப்போ அவர் எடுத்த முயற்சி வீணா போச்சு.
இரண்டு எவிக்ஷன்
ஆனால் இதை பார்க்கும்போது நமக்கு ஒரு சந்தேகம் வருகிறது. முத்தழகு என்று ஒரு கேரக்டர் உள்ளே இருக்கிறார். பல நேரங்களில் அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவர் எந்த ஒரு விஷயத்தையும் சுவாரசியமாக செய்யவில்லை. ஆனால் அவர் மட்டும் ஒவ்வொரு வாரமும் நாமினேஷனில் தப்பித்துக் கொண்டிருக்கிறார். அது எப்படி என்பதுதான் புரியாத புதிராகவே இருக்கிறது. போன வாரத்தில் அஸ்மிதா மற்றும் அக்ஷிதா இரண்டு பேரையும் வெளியேற்றி இருந்தார்கள். அதேபோல இந்த வாரம் முகேஷ் மற்றும் முத்தழகுவை வெளியேற்ற போகிறார்களா? என்ற கேள்விகளும் எழுகிறது. ஆனால் இப்ப வரைக்கும் கிடைத்த தகவலின்படி பார்த்தால் முகேஷ் பெயர் தான் அதிகமாக அடிபடுகிறது. ஆனாலும் நாளை கூட ஏதாவது மாற்றம் நடக்கலாம் பொறுத்து இருந்து பார்ப்போம்.



Click it and Unblock the Notifications
