சோனியா ராகுலிடம் நேரில் சொல்ல வேண்டியது என்ன.. சட்ட நிபுணர்களுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை
சென்னை: மத்திய பாஜக அரசு, நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்யவுள்ளது. கடந்தாண்டு இந்த மசோதா கொண்டு வரப்பட்டபோது திமுக எதிர்த்தது. இந்தமுறை பல்வேறு எதிர்ப்புகளை மீறி மசோதாவை ஆதரிப்பதாக திமுக கூறியுள்ளது. இது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மசோதாவுக்கு ஆதரவு வழங்க கூடாது என வலியுறுத்தி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஸ்டாலினை சந்திக்கவுள்ளனர். இதற்காக திமுக சட்ட நிபுணர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
மத்திய பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரிப்பதாக முடிவு செய்துள்ளது. மத்திய அமைச்சர் அமித்ஷாவை கனிமொழி, டி.ஆர். பாலு உள்ளிட்டோர் சந்தித்தனர். திமுகவின் முடிவுக்கு இண்டியா கூட்டணி, தவெகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மசோதாவுக்கு ஆதரவு கொடுக்க கூடாது என்பதற்காக, சோனியா காந்தி மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்கவுள்ளனர்.

சட்ட நிபுணர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை
மாலை 4 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. திமுக சட்டப்பிரிவு நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ, எம்.பிக்கள் வில்சன், கலாநிதி வீராசாமி ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். சித்தரஞ்ச சாலையில் உள்ள ஸ்டாலினின் வீட்டில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. சோனியா, ராகுல் உள்ளிட்டோரை சந்திப்பதற்கு முன்பு நடப்பதால், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ஸ்டாலினை 'பிரதர்' என்று குறிப்பிட்டு ட்வீட் பதிவு செய்தார். ஆனால் தங்களின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. நாங்கள் எட்டப்பர்கள் இல்லை. கட்டபொம்மன் என்று ஸ்டாலின் பதிலடி கொடுத்தார். திமுக தங்கள் முடிவை சந்திப்புக்கு முன்னதாகவே அறிவித்துவிட்டனர். சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு, திமுகவுடனான கூட்டணியை முறித்து காங்கிரஸ் தவெக கூட்டணியில் இணைந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.
எடுத்த வைக்க போகும் பாயின்ட்
தேசியளவு ஸ்டாலின் கிங் மேக்கராகவும், திமுகவின் அரசியல் செல்வாக்கை நிரூபித்து வருகிறார்கள். ஸ்டாலின் சந்திப்பில் காங்கிரஸ் நிர்வாகிகள், மசோதாவை ஆதரிக்க கூடாது. அதனால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பு ஏற்படும் என்பதை விளக்கவுள்ளனர். மசோதாவில் உள்ள அம்சங்கள், அதில் தமிழகத்திற்கு உள்ள சாதகங்கள் குறித்து ஆலோசித்து வருகிறார். இந்த பாயின்ட்களை காங்கிரஸ் தலைவர்களிடமும் அவர் எடுத்துரைப்பார் என கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications
