If You Are Bad.. I Am Your Dad! இந்திய அரசியலையே புரட்டிப் போட்ட திமுக! எக்ஸில் ட்ரெண்டாகும் #STALIN

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கப் போவதாக திமுக கூறியுள்ளது தேசிய அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. இதற்கிடையே தொகுதி மறுவரையறை தொடர்பாக 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் ஸ்டாலினைச் சந்திக்க வர உள்ள நிலையில், இந்தியா முழுவதும் பேசப்படும் கட்சியாக திமுகவும், பேசப்படும் தலைவராக ஸ்டாலினும் மாறி இருக்கிறார். எக்ஸ் ட்ரெண்டிங்கில் 'stalin' என்ற ஹேஸ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது.

இந்தியா முழுவதும் பேசப்படும் கட்சியாக மாறி இருக்கிறது திமுக, தொகுதி மறுவரையறை மசோதா நாளை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. மத்திய அரசின் இந்த திருத்தப்பட்ட மசோதாவுக்கு திமுக ஆதரவளித்து இருக்கிறது.

MK Stalin

நேற்று சென்னையில் திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில் அதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் துணை பொது செயலாளர் ஆ.ராசா தொகுதி மறு வரை மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்.

தொடர்ந்து திமுகவின் 22 மக்களவை உறுப்பினர்களும் எட்டு மாநிலங்களவை உறுப்பினர்களும் இதற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, திமுக எம்பிக்கள் கனிமொழி, டி ஆர் பாலு, ஆ ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் சந்தித்து திமுகவின் ஆதரவை தெரிவித்தனர்.

நாளை தொகுதி மறு வரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா ஆகிய இரண்டு முக்கிய மசோதாக்களை அறிமுகப்படுத்த பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. நவம்பர் 30ஆம் தேதியான நாளை முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு அமர்வு கூடுகிறது. நாளை மக்களவையும் புதன் கிழமை மாநிலங்களவையும் கூடுகிறது.

MK Stalin Trends on X

அப்போதுதான் இந்த இரண்டு மசோதாக்களும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. திமுக ஆதரவளித்துள்ளதால் எந்தவித சிக்கலும் இன்றி இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும் எனவே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திமுகவின் இந்த முடிவால் காங்கிரஸ் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

நேற்று இந்தியா கூட்டணியின் தலைவர்கள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் திடீர் ஆலோசனை நடத்தினர். இதில் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். மேலும் இன்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க இந்தியா கூட்டணி தலைவர்கள் சென்னை வருகின்றனர்.

குறிப்பாக ராகுல் காந்தி, சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் இந்த பயணத்தை மேற்கொள்கின்றனர். இதற்கு இடையே இந்தியா முழுவதும் பேசப்படும் கட்சியாக திமுகவும், அரசியல் தலைவராக ஸ்டாலினும் மாறி இருக்கின்றனர்.

இந்திய அளவில் பொலிடிகல் ட்ரெண்டிங்கில் மூன்றாவது இடத்தில் #STALIN என்ற பெயர் இருக்கிறது. ராகுல் காந்தி என்ற பெயர் 12வது இடத்திலும், எக்ஸ் எம்எல்ஏ என்ற ஹாஷ்டேக் 24 வது இடத்திலும் இருக்கிறது. காங்கிரஸ் என்ற பெயர் கூட 11வது இடத்தில் தான் இருக்கும் நிலையில், ஸ்டாலின் என்ற பெயர் மூன்றாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+