"பிச்சை பாத்திரத்துடன் சென்னைக்கு வர வேண்டாம்னு ஸ்டாலின் சொல்லிட்டார்!" ராகுலை கிண்டலடித்த பாஜக
சென்னை: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக அளித்த ஆதரவு நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யுமாறு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் பிச்சை பாத்திரத்துடன் சென்னைக்கு வர வேண்டாம் என திமுக தலைவர் ஸ்டாலின் நாசுக்காக சொல்லிவிட்டார் என்று பாஜக தேசிய துணை தலைவர் ராம் மாதவ் கிண்டல் செய்துள்ளார்.
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்த நிலைப்பாட்டை தெரிவிக்க நேற்றைய தினம் மத்திய அமைச்சர் அமித்ஷாவை திமுக எம்பிக்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் நேரில் சந்தித்திருந்தனர்.
திமுகவின் ஆதரவு நிலைப்பாட்டால் அதிர்ச்சி அடைந்த இந்தியா கூட்டணி தலைவர்கள், இன்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க சென்னை வருகிறார்கள். இதனிடையே ஸ்டாலினுக்கு, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி சமூகவலைதள பக்கத்தில் ஒரு கோரிக்கையை வைத்துள்ளார்.

ராகுல் கோரிக்கை
ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: "இந்தியா கூட்டணியின் மூத்த தலைவர்களும் நானும் ஸ்டாலினை சந்திக்க சென்னை வருகிறோம். தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வேண்டும் என திமுகவை கேட்டுக் கொள்ள போகிறோம்.
மக்களவை எம்பிக்களின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவது என்பது இந்தியாவில் ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டு வரும். சகோதரர் ஸ்டாலின் எப்போதும் தமிழர்களுக்கு எதிரான சக்திகளுக்கு எதிர்த்து ஒரு பாறை போன்ற உறுதியாக நின்றிருக்கிறார். எப்போதும் தமிழர், தமிழர்களின் நலனையும் அரசியலமைப்பு சட்டத்தையும் பாதுகாப்பதில் திமுக உறுதியாக நின்றுள்ளது. எனவே நாம் அனைவரும் சேர்ந்து தொகுதி மறுவரையறை மசோதாவை தோற்கடிக்க வேண்டும் என ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்டாலின் ட்வீட்
ராகுலின் இந்த டவீட்டிற்கு ஸ்டாலின் கூறியிருப்பதாவது: "சகோதரர் ராகுல் காந்தி அவர்களே! அரசியலமைப்பு சட்டத்தையும், மாநில உரிமைகளையும் பாதுகாப்பதில் திமுக வரலாற்று சிறப்புமிக்க பங்களிப்பை செய்துள்ளதாக கூறியதற்கு நன்றி. தமிழகத்தின் நலனையும் தமிழக மக்களின் நலனையும் முதன்மையாக கொண்டே நாங்கள் எப்போதும் ஒவ்வொரு முடிவையும் எடுத்துள்ளோம்.
Veerapandya Kattabomman was a great freedom fighter from Tamil Nadu and Ettapan was d one who conspired with d British to backstab Kattabomman. Rahul arrogantly called DMK as Ettappans in d past. Now Stalin paid Rahul ‘Ettappan’ back for backstabbing DMK. He politely told ‘brother’ not to come to Chennai with a begging bowl now.
— Ram Madhav (@rammadhav_) November 29, 2026
மாநில உரிமைகளில் நாங்கள் எப்போதும் சமரசம் செய்துக் கொண்டதே இல்லை. வரலாறு எங்களை எட்டப்பர்களாக அல்ல, கட்டபொம்மன்களாகவே மதிப்பிடும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது" என ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அதாவது தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டில் இருந்து திமுக பின்வாங்காது என்பதை ஸ்டாலின் மறைமுகமாக சொல்லிவிட்டார். ஸ்டாலினின் இந்த ட்வீட்டை குறிப்பிட்டுத்தான் பாஜகவின் ராம் மாதவ், காங்கிரஸ் கட்சியை கிண்டல் செய்துள்ளார்.
எட்டப்பரா
இதுகுறித்து ராம் மாதவ் போட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: வீரபாண்டிய கட்டபொம்மன் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மாபெரும் சுதந்திர போராட்ட வீரர். ஆனால் கட்டபொம்மனின் பின்னால் குத்துவதற்காக ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து சதி செய்தவர்தான் எட்டப்பன். கடந்த காலங்களில் ராகுல் காந்தி, திமுகவை எட்டப்பன் என அழைத்திருந்தார்.
பிச்சை பாத்திரம்
2 அமைச்சர் பதவிக்காக தவெகவுடன் கூட்டணிக்கு சென்று திமுகவை முதுகில் குத்தியதற்காக ராகுலை, ஸ்டாலின் எட்டப்பன் என திருப்பி விமர்சித்துள்ளார். மேலும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கான ஆதரவை மறுபரிசீலனை செய்ய கோரி திமுகவை சந்திக்க, பிச்சை பாத்திரத்துடன் சென்னைக்கு வர வேண்டாம் என சகோதரர் ராகுலுக்கு ஸ்டாலின் நாசூக்காக பதில் அளித்துள்ளார். இவ்வாறு பாஜக ராம் மாதவ், காங்கிரஸ் கட்சியை கிண்டல் செய்து ட்வீட் போட்டுள்ளார்.
எட்டப்பன் என ராகுல் சொன்னது
கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மாமல்லபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "தொகுதி மறுவரையறை மூலம் தமிழக மக்களின் உரிமையை பறிக்க பாஜக அரசு சதி செய்கிறது. தமிழகத்தில் எட்டப்பன் என்ற ஒரு முக்கிய கதாபாத்திரம் உள்ளது. அந்த பெயர் துரோகத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. யாராவது தமிழகத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கிறார்கள் என்றால் அவர்கள்தான் துரோகிகள்" என பேசியிருந்தார். அவர் திமுக பெயரை குறிப்பிடாமல் அக்கட்சியை மறைமுகமாக விமர்சித்ததாகவே பார்க்கப்பட்டது. இது திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.





Click it and Unblock the Notifications
