"காங்கிரஸ் நிலைப்பாட்டையே திமுகவும் எடுக்கும்".. தொகுதி மறுவரையை விவகாரத்தில் ப சிதம்பரம் நம்பிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக திமுக அறிவித்துள்ளது. திமுக தனது நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் என்பது பற்றி முக ஸ்டாலினை சந்தித்து பேச காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கோ, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் டெல்லியில் இருந்து சென்னை வந்துள்ள நிலையில் ''காங்கிரஸ் நிலைப்பாட்டையே திமுகவும் எடுக்கும்'' என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப சிதம்பரம் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: '' 'இந்தியா' கூட்டணி இன்னும் அப்படியேதான் உள்ளது. ஆனால் இந்த கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே, குறிப்பாக திமுகவுடன் சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் 'இந்தியா' கூட்டணியில் சேரவில்லை.

pachidambaram

ஆனால் திமுக மற்றும் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) அணி தங்களின் நிலைப்பாட்டை மாற்றி கொண்டுள்ளன. சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் அணி) மற்றும் முக ஸ்டாலினின் திமுக ஆகியவை கடந்த ஏப்ரல் மாதம் நாங்கள் எடுத்த நிலைப்பாட்டையே ஆதரித்தன. இப்போதும் அந்த நிலைப்பாட்டிலேயே உறுதியாக இருக்கும் என்று நான் இன்னும் நம்புகிறேன்'' என்று கூறியுள்ளார்.

ப சிதம்பரம் இப்படி நம்பிக்கை தெரிவித்தாலும் கூட நேற்றைய தினமே திமுக தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தது. முக ஸ்டாலின் முன்வைத்த அனைத்து மாநிலங்களுக்கும் 50 சதவீத அளவுக்கு லோக்சபா தொகுதிகளை உயர்த்துவது மற்றும் 2051 வரை தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யாமல் இருப்பது உள்ளிட்டவற்றிற்கு பாஜக ஒப்புக்கொண்டு இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளது. இதனால் திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

இருப்பினும் திமுக தனது நிலைப்பாட்டை மாற்ற வேண்டும். மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவு வழங்கக்கூடாது என்பதற்காக திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்திக்க காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி ராகுல் காந்தி, முதல்வர்களாக இருக்கும் டிகே சிவக்குமார் (கர்நாடகா), ரேவந்த் ரெட்டி (தெலுங்கானா), விடி சதீசன் (கேரளா) மற்றும் 'இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்கள் சென்னை வந்துள்ளனர். இவர்கள் மாலை 4 மணியளவில் முக ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளனர். இந்த சந்திப்புக்கு முன்பாக தான் கடந்த ஏப்ரல் மாதம் திமுக, காங்கிரஸ் கட்சியை போல் தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்த்து வாக்களித்தது. அதுபோல் இந்த முறையும் திமுக தற்போதைய தனது நிலைப்பாட்டை மாற்றி காங்கிரசுடன் இருக்கும் என்று ப சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+