Stalin-Sonia Gandhi Meet Live: சென்னையில் சோனியா காந்தி.. ஸ்டாலினுடன் நடக்கும் சந்திப்பு!

Live
Subscribe to Oneindia Tamil

சென்னை: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக திமுக அறிவித்துள்ள சூழலில், திடீரென சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களும், இந்தியா கூட்டணி தலைவர்களும் சென்னை வந்துள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க உள்ள சூழலில், திமுகவின் முடிவில் மாற்றம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Delimitation Bill

Nov 29, 2026, 3:13 pm IST

தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலினின் வீட்டிற்கு இன்னும் சற்று நேரத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் வர இருக்கின்றனர். இதனையொட்டி ஸ்டாலின் வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Nov 29, 2026, 3:11 pm IST

டெல்லியில் இருந்து திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி சென்னை திரும்பி இருக்கிறார். இன்னும் சற்று நேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்திக்க உள்ளனர். அதற்கு முன் கனிமொழி சென்னை வந்திருக்கிறார்.
Nov 29, 2026, 3:04 pm IST

திமுகவுக்கு லோக் சபாவில் 22 எம்பி-க்களும், ராஜ்ய சபாவில் குறிப்பிடத்தக்க இடங்களும் உள்ளன. திமுகவை நம் பக்கம் வைத்து கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தலைமைக்கு முன்பே கூறினேன். தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தது சரி தான். ஆனால் அதன்பின் நடந்த சில விஷயங்களால் திமுக உடனான உறவு குலைந்துவிட்டது. சிலவற்றை கட்சிக்குள் மட்டுமே பேச முடியும்.. வெளியில் கூற முடியாது: ப.சிதம்பரம்
Nov 29, 2026, 2:54 pm IST

இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் 12 பேரும் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்கு பின் திமுக - காங்கிரஸ் இடையிலான உறவில் பிணக்கு ஏற்பட்டது. தற்போது, சுமார் 7 மாதங்களில் மீண்டும் திமுகவின் ஆதரவை கோரி காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.
Nov 29, 2026, 2:37 pm IST

சென்னை வந்த இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள்
Nov 29, 2026, 2:36 pm IST

இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஸ்டாலினை சந்திக்க சென்னை வந்துள்ளனர். இந்த நிலையில் ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள தயாளு அம்மாளை பார்க்க வந்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலினை மாலை 4 மணிக்கு இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்திக்கின்றனர்.
Nov 29, 2026, 2:36 pm IST

காங்கிரஸ் கட்சி ஆளும் முதல்வர்களான டிகே சிவகுமார், ரேவந்த் ரெட்டி, விடி சதீஷன் உள்ளிட்டோரும் சென்னை வந்துள்ளனர். அதேபோல் கேசி வேணுகோபால், அபிஷேக் பானர், கபில் சிபல், அபய்குமார் சின்ஹா, பிரனவ் ஷா ஆகியோரும் சென்னை வந்துவிட்டனர்.
Nov 29, 2026, 2:36 pm IST

தொகுதி மறுவரையறை மசோதா குறித்து திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் சென்னை வந்துள்ளனர். சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, எம்ஏ பேபி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் சென்னை வந்திருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+