5 முறை போன் செய்த ஸ்டாலின்.. பதில் கூட சொல்லாத ராகுல்.. திமுக - காங்கிரஸ் உறவில் விரிசல் எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற வேண்டும் என்பதால் காங்கிரஸ் எடுத்த முடிவு, இன்று தேசிய அரசியலில் அதன் கூட்டணி கணக்குகளை பாதித்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோர்த்து ஆட்சியில் பங்கு பெற்ற காங்கிரஸ், மறுபுறம் திமுகவுடனான நீண்டகால உறவை முறித்துக்கொண்டது. இந்த சூழலில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் திமுக எடுத்த முடிவை பார்த்து காங்கிரஸ் ஆடிப்போய் இருக்கிறது.

பல ஆண்டுகளாக ராகுல் காந்திக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே நிலவிய நெருக்கம், திமுக - காங்கிரஸ் கூட்டணியின் முக்கிய பலமாக கருதப்பட்டது. லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்முறையாக ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்ததே ஸ்டாலின் தான். அதேபோல ஸ்டாலினுக்கு இனிப்பு வாங்கி கொடுப்பது என ராகுல் காந்தியும் நட்பு பாராட்டினார்.

Congress DMK Rift

திமுக- காங்கிரஸ்

ஆனால், 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பும், தேர்தலுக்கு பிறகும் காங்கிரஸ் கட்சிக்குள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற வேண்டும், அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும், மாநில அளவில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இது திமுக காங்கிரஸ் உறவை பாதித்தது மட்டுமின்றி, ஸ்டாலின்- ராகுல் காந்தி நட்பையும் பாதித்தது.

தேர்தலுக்கு முன்பே காங்கிரஸில் மாணிக்கம் தாகூர் தொடங்கி பல தலைவர்கள் திமுகவில் இருந்து விலகி தவெகவுடன் கூட்டணி அமைக்கவே விரும்பினர். ராகுல் காந்தியும் கூட அதற்கு க்ரீன் சிக்னல் கொடுத்ததாகவே சொல்லப்பட்டது. இருப்பினும், சோனியா காந்தி, ப சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்களின் கோரிக்கையை கேட்டே திமுக உடனேயே இணைந்து காங்கிரஸ் தேர்தலை எதிர்கொண்டது.

எல்லாமே மாறிவிட்டது

ஆனால், தேர்தல் முடிவு வந்தவுடன் எல்லாமே மாறியது. முடிவுகள் வெளியான உடனேயே விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்தது. ஆட்சியில் பங்கு பெற்ற காங்கிரஸுக்கு இரு அமைச்சரவை பதவியும் தரப்பட்டது.. இதனால் திமுக - காங்கிரஸ் உறவு முறிந்தது. நாடாளுமன்றத்திலும் இரு கட்சிகளின் எம்பிக்கள் தனித்தனியாக அமர்வோம் என சொல்லும் அளவுக்கு நிலைமை போனது.

5 போன் கால்

தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஒன்றாக பிரச்சார கூட்டங்களில் பங்கேற்குமாறு ஸ்டாலின் தரப்பு ராகுல் காந்தியை தொடர்பு கொண்டுள்ளது. அதுவும் ஒரு முறை இல்லை.. மொத்தம் ஐந்து முறை தொடர்புகொண்டுள்ளது. ஆனால், அந்த அழைப்புகளுக்கு ராகுல் பதிலளிக்கவில்லை என்றும் ஸ்டாலினுடன் ஒருமுறைகூட இணைந்து பிரச்சாரம் செய்யவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அப்போது மல்லிகார்ஜுன கார்கே மட்டுமே ஸ்டாலினுடன் பிரச்சாரத்தில் பங்கேற்றார். இது கூட்டணி இமேஜ்ஜை கடுமையாக பாதித்து.

கோபம்

தேர்தலுக்கு பிறகு முடிவுகள் முழுமையாக வெளியாகும் முன்பே, திமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய காங்கிரஸ், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை கொடுத்தது. கூட்டணியில் இருந்த விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளும் தவெக ஆதரவு நிலைப்பாட்டை தான் எடுத்தன. ஆனால், அந்த கட்சிகள் தங்களது முடிவுகளை எடுக்கும் முன்பு ஸ்டாலினை சந்தித்து நன்றி சொல்லிவிட்டு போனார்கள். ஆனால், காங்கிரஸ் மட்டும் சொல்லாமல் கொள்ளாமல் சென்றுவிட்டதாக திமுக தரப்பினர் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

2018ஆம் ஆண்டிலேயே ராகுல் காந்தியை எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்தார். ராகுலும் ஸ்டாலினை தனது சகோதரர் என்று பலமுறை குறிப்பிட்டார். 2019, 2024 லோக்சபா தேர்தல்களில் தமிழகத்தில் கிடைத்த வெற்றிக்கு பிறகும், கூட்டணிக் கட்சிகளின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ராகுல் செயல்படவில்லை என்பது திமுகவினரின் மற்றொரு குற்றச்சாட்டாகும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+