ஒட்டுமொத்த தலைகளும் சென்னையில்! 4 மணிக்கு மீட்டிங்! அதற்குள் வீட்டிலிருந்து காரில் கிளம்பிய ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இன்று மாலை 4 மணிக்கு மு.க.ஸ்டாலினை சந்திக்க திட்டமிட்டுள்ள நிலையில், மு.க.ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள தனது தாயார் தயாளு அம்மாளை பார்க்கச் சென்றுள்ளார்.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை ஒன்றிய பாஜக அரசு கொண்டு வரவுள்ளது. இந்த மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவிப்பதாக அக்கட்சி அறிவித்திருந்தது. இது தொடர்பான தீர்மானம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று காலை நடைபெற்ற அக்கட்சியின் எம்.பிக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

mk stalin

இதனையடுத்து, திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, தயாநிதி மாறன் எம்.பி உள்ளிட்ட திமுக எம்.பிக்கள் டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று மாலை சந்தித்துப் பேசினர். தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவளிப்பதாக அமித் ஷாவிடம் தெரிவித்தனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இன்று சென்னையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்திக்க உள்ளார். அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் சந்திக்க உள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கம்யூனிஸ்ட் தலைவர் எம்.ஏ.பேபி உள்ளிட்டோரும் ஸ்டாலினைச் சந்திக்க உள்ளனர்.

அகில இந்திய அரசியல் தலைவர்கள் சென்னை வந்தடைந்துள்ளனர். முதல் தனி விமானத்தில் சோனியா காந்தியும், அடுத்த விமானத்தில் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் சென்னை வருகை தந்துள்ளனர். மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் ஒரே வாகனத்தில் சென்னை விமான நிலையத்தில் இருந்து நட்சத்திர விடுதிக்குச் செல்கின்றனர்.

நட்சத்திர ஹோட்டலில் இன்று மதிய உணவு அருந்தும் இந்தியா கூட்டணி தலைவர்கள், பிற்பகல் 3.10 மணியளவில் அங்கிருந்து, சித்ரஞ்சன் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு சந்திப்பதற்காக புறப்படுகின்றனர். 4 மணிக்கு திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துப் பேசுகின்றனர்.

இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மு.க.ஸ்டாலினை சந்திக்க சென்னை வந்துள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள தனது தாயார் தயாளு அம்மாளை பார்க்கச் சென்றுள்ளார்.

வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக தயாளு அம்மாள் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தனது தாயாரின் உடல்நலம் குறித்து நேரில் விசாரிக்கவும், மருத்துவர்களிடம் சிகிச்சை விவரங்களைக் கேட்டறியவும் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

தயாளு அம்மாளை பார்த்துவிட்டு, மு.க.ஸ்டாலின் மீண்டும் வீடு திரும்பிய பிறகு, மாலை 4 மணிக்கு இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் அவரை சந்திக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+