ஸ்டாலின் எடுத்த முடிவு.. இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் தமிழ்நாடு.. சென்னை மீது மீடியா கவனம்!
சென்னை: தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் எடுத்த ஒரு முடிவு, ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் சென்னை மீது திருப்பி இருக்கிறது. சோனியா காந்தி, ராகுல் காந்தி, 3 மாநில முதல்வர்கள், இந்திய கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் சென்னைக்கு வந்து ஸ்டாலினை சந்திக்க உள்ளனர். இதனால் இந்தியாவின் தலையெழுத்தை தமிழ்நாடு முடிவு செய்வதாக பார்க்கப்படுகிறது.
தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பதாக திமுக அறிவித்த நிமிடம் முதல் இந்தியாவே பரபரப்பாகி இருக்கிறது. திமுக தரப்பில் முன் வைக்கப்பட்ட 2 முக்கிய கோரிக்கைகளை பாஜக ஏற்றுக் கொண்டு, தொகுதி மறுவரையறை மசோதாவில் சேர்த்தது. இதன்பின் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பதாக அறிவித்த திமுக, நேற்றிரவு அமித்ஷாவை சந்தித்து பேசியது.

சட்டசபைத் தேர்தலில் அடைந்த தோல்விக்கு பின் திமுகவுக்கு முக்கியத்துவம் குறைந்துவிட்டதாக பார்க்கப்பட்டது. அதேபோல் தேசிய அரசியலில் தமிழ்நாட்டின் பங்கும் குறைந்துவிட்டதாக கருதப்பட்டது. ஏனென்றால் ஆளும் கட்சியான தவெகவுக்கு நாடாளுமன்றத்தில் ஒரு எம்பி கூட இல்லை. எதிர்க்கட்சியான திமுக வசம் எம்பிக்கள் இருந்தும் தேசிய கட்சிகளுடன் கூட்டணியில் இல்லை.
கடந்த 10 ஆண்டுகளாக பாஜக எதிர்ப்பை தீவிரமாக திமுக பேசி வந்ததால், காங்கிரஸ் கட்சியும் ஸ்டாலினை கண்டுகொள்ளவில்லை. திமுக நிச்சயமாக பாஜக பக்கம் நெருங்காது என்று நம்பிக்கையுடன் இருந்தது. ஆனால் தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தை பாஜக முழுமையான கைவிட்டதாக நம்பியது தான் மிகப்பெரிய ட்விஸ்ட்.
நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத்தொடர் முடிவடைந்து 100 நாட்களுக்கு பின்னரும் ஒத்தி வைக்கவில்லை. இதற்கு இடையில் திமுகவை தொடர்ச்சியாக காங்கிரஸ் நிர்வாகிகள் சீண்டி கொண்டே இருந்தனர். இந்த நிலையில் திமுக முன் வைத்த நிபந்தனைகளை பாஜக, ஏற்க உடனடியாக தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தது.
இதனால் 2029 லோக் சபா தேர்தலில் இந்தியாவின் அரசியல் ஒட்டுமொத்தமாக மாறும் சூழல் ஏற்பட்டது. இதனை தாமதமாக காங்கிரஸ் கட்சி புரிந்து கொண்டு திடீரென திமுக தலைவர் ஸ்டாலினை சமாதானம் செய்ய சென்னை வந்துள்ளனர். இதனால் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் திமுக தலைவர் ஸ்டாலின் பக்கமும், தமிழ்நாடு பக்கமும் திரும்பி இருக்கிறது.
திமுகவின் நிலைப்பாட்டில் மாற்றம் வந்தால் அது பாஜகவுக்கு மிகப்பெரிய சோதனையாக அமையும். ஒருவேளை திமுக நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால் காங்கிரஸ் கட்சிக்கு சோதனையாக அமையும். இரு தேசிய கட்சிகள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவும் சென்னை பக்கம் திரும்பி பார்த்து நிற்கிறது. நாட்டின் ஒவ்வொரு டிவி சேனலும் திமுகவின் முடிவுக்காக காத்திருக்கின்றன.
இதனால் இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் தமிழ்நாட்டிற்கு இருப்பதாக சோசியல் மீடியாவில் விவாதம் நடந்து வருகிறது. இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சி வெறும் 2 அமைச்சர் பதவிக்காக இவ்வளவு சிக்கலில் மாட்டிவிட்டதாகவும் திமுகவினர் கிண்டல் செய்ய தொடங்கி இருக்கின்றனர்.




Click it and Unblock the Notifications
