தொகுதி மறுவரையறை மசோதா! திமுக நிலைப்பாட்டை கார்கேவிடம் சொல்லிட்டேன்! கனிமொழி!
சென்னை: தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் எங்களுடைய நிலைப்பாடு என்ன என்பதை காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் தெளிவாக தெரிவித்துவிட்டேன் என திமுக எம்பியும் கட்சியின் துணை பொதுச் செயலாளருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது: தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்பதை நேற்றைய தினம் எம்பிக்கள் கூட்டத்தின் முடிவில், தலைவர் ஸ்டாலின் அறிவித்துவிட்டார்.

காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது எங்களுக்கு தெரியாது. எங்கள் நிலைப்பாடுதான் எங்களுக்கு தெரியும். அவர்களது நிலைப்பாட்டை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன். எங்கள் தலைவர் ஸ்டாலினை சந்திக்க இந்தியா கூட்டணி தலைவர்கள் வருகிறார்கள். ஆனால் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்பதை கார்கேவிடம் சொல்லிவிட்டேன். இவ்வாறு கனிமொழி தெரிவித்திருந்தார்.
மத்திய அரசு கொண்டு வருவது Fair Delimitation என்பதால் திமுக அந்த மசோதாவுக்கு ஆதரவு தருவது என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. தற்போது தமிழகத்தின் பிரதிநிதித்துவம் 7.18% சதவீதமாக இருக்கும் நிலையில் புதிய மசோதாவால் 7.21% சதவீதம் என்ற அளவில் பிரதிநிதித்துவம் உயர்கிறது.
இதனால் இந்த மசோதாவுக்கு ஆதரவு வழங்க திமுக முடிவு செய்துள்ளது. மேலும் மாநிலங்கள் முழுவதும் ஒரே விகிதத்தில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதமாக உயர்த்தும் மசோதா என்பதாலும் திமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த ஆதரவு நிலைப்பாட்டை நேற்றைய தினம் திமுக எம்பிக்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.



Click it and Unblock the Notifications
