எடப்பாடியே பேசிட்டாரு.. இன்னும் வாய் திறக்காத CM விஜய்! எப்போ தான் பேசுவீங்க ப்ரோ..கேட்கும் கட்சிகள்
சென்னை: தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே பரபரப்பாக இருக்கிறது தொகுதி மறு வரையறை விவகாரம். இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க இந்தியா கூட்டணி தலைவர்கள் தமிழகம் வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியே கருத்து தெரிவித்துவிட்டார். ஆனால் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடங்கி தற்போது தொகுதி மறுவரையறை வரை முதலமைச்சர் விஜய் வாய் திறக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
தமிழக நாடாளுமன்றத்தில் 543 என்ற எண்ணிக்கையில் இருக்கும் எம்பிக்கள் எண்ணிக்கையை 800க்கு மேல் உயர்த்தும் மத்திய அரசின் திட்டம் தான் தொகுதி மறு வரையறை மசோதா. கடந்த ஏப்ரல் மாதம் இந்த மசோதாவை முதல் கட்டமாக நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிகள் எடுத்தது.

ஆனால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் இதனால் மிகக் கடுமையாக பாதிக்கப்படும் என குரல் கொடுத்தவர் திமுக தலைவரும் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின். தனது தேர்தல் பிரச்சாரத்தை விட தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக பேசியதில் தான் கவனம் செலுத்தினார்.
இதனால் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தன. குறிப்பாக இந்தியா கூட்டணியில் இருந்த அரசியல் கட்சித் தலைவர்கள் தொகுதி மறு வரையறை மசோதாவை எதிர்த்து மாநிலங்களவையில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இல்லாததால் இந்த மசோதா தோற்கடிக்கப்பட்டது. அதற்குப் பிறகு கேரளா, மேற்குவங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட தொகுதிகளில் சட்டசபை தேர்தல் முடிவுகளில் அப்போதை ஆளும் கட்சிகள் எதிர்க்கட்சிகளாக மாறின.
இந்த நிலையில் சில திருத்தங்களுடன் மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டுவர பாஜக முடிவு செய்துள்ளது. இதற்காக நாளை முதல் டிசம்பர் 2ஆம் தேதி வரை சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடக்கிறது. நாளை மக்களவையும், புதன்கிழமை மாநிலங்களவையும் கூட இருக்கிறது. இந்த இரு அவைகளிலும் தொகுதி மறு வரையறை மசோதாவை தாக்கல் செய்து வெற்றி பெற நினைத்த பாஜக அதற்காக பல்வேறு மாநில கட்சிகளின் ஆதரவை நாடியது.
அதில் ஒரு கட்சி தான் திமுக பாஜகவை எதிர்த்து இந்திய அளவில் ஒருங்கிணைந்த கூட்டணியை உருவாக்கியதில் திமுகவின் பங்கு மிகப் பெரியது. ஆனால் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்ற நிலையில் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி போனது காங்கிரஸ். அத்தோடு திமுக காங்கிரஸ் இடையிலான உறவு முடிந்து போய்விட்டது. இதற்கிடையே தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பதாக அதிரடியாக அறிவித்திருக்கிறது திமுக.
மக்களவையில் 22 எம்பிக்களும் மாநிலங்களவையில் 8 எம்பிகளும் திமுகவுக்கு இருக்கின்றனர். இதனால் பாஜகவின் எண்ணத்தை ஈடேற்ற திமுகவின் ஆதரவு அவசியம். தமிழ்நாட்டின் உரிமை பாதிக்கப்படாது என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில் அந்த மசோதாவை ஆதரிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். அதே நேரத்தில் தொகுதி மறு வரையறை மசோதாவை ஆதரிக்க வேண்டாம் என ராகுல் காந்தி, சோனியா காந்தி, மம்தா பானர்ஜி ஆகியோர் இன்று சென்னை வருகின்றனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் இல்லத்தில் இந்த சந்திப்பானது நடக்க இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தொகுதி மறுவறையை விட்டு விடக்கூடாது. கண்டிப்பாக அது தேவை. மாநில நலம் சார்ந்த விஷயம் என்பதால் திமுக ஆதரவு தந்திருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளார்.
பொதுவாக திமுக சார்ந்த விஷயங்களில் எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவிக்க மாட்டார். ஆனால் தொகுதி மறுவரையறை விஷயத்தில் முதன்முறையாக கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் மற்றொருபுறம் தமிழக வெற்றிக்கழக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் குறித்து சில கேள்விகள் முன்வைக்கப்படுகிறது. தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக தமிழக கட்சி கழகத்தின் நிலைப்பாடு என்ன? மக்களவையில் உறுப்பினர்கள் இல்லாவிட்டாலும் அரசியல் நலன் சார்ந்து, தமிழக நலன் சார்ந்து ஆதரிப்பதா? இல்லையா? என எந்த கருத்தையும் முதல்வர் விஜய் இதுவரை தெரிவிக்கவில்லை.
ஏற்கனவே திருப்பரங்குன்றம் விவகாரம்.. கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்.. என அடுத்தடுத்து பல சிக்கல்களை சந்தித்தபோதும் இதுவரை முதலமைச்சர் விஜய் வாய் திறக்கவில்லை, தற்போது இந்தியா முழுக்க பேசு பொருளாக மாறி இருக்கும் தொகுதி மறு வரையறை குறித்தும். தமிழக வெற்றிக்கழகம் தனது நிலைப்பாட்டை அறிவிக்காத நிலையில், முதல்வர் விஜய்யும் பேசாதது ஏன்? என கேள்வி எழுப்புகின்றன எதிர்க்கட்சிகள்.




Click it and Unblock the Notifications
