சிம்ம ராசிக்கு தலைக்கு மேல் சுத்தும் கத்தி.. அதிர்ஷ்டமும் காத்திருக்கு.. எந்த விஷயங்களில் கவனம் தேவை

Subscribe to Oneindia Tamil

Rasi palan this week: நவம்பர் 30 ஆம் தேதி முதல் டிசம்பர் 6 ஆம் தேதி வரையிலான (கார்த்திகை 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை) இந்த வாரத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிடக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாகும். இந்த கிரக நிலை மாற்றமானது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த வாரம் நவம்பர் மாதம் நிறைவடைந்து டிசம்பர் மாதம் பிறக்கப் போகிறது. மாதத்தின் ஆரம்பத்திலேயே நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகு கேது பெயர்ச்சி வரும் 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில், சிம்ம ராசியினருக்கு இந்த வாரம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.

simmam-what-kind-of-benefits-will-simmam-rasi-people-get-this-week

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசியினருக்கு கடுமையான பிரச்சனை, அவஸ்தை, பாதிப்புகளில் இருந்து விடுதலை பெறக்கூடிய காலகட்டம். மன நிம்மதி அதிகமாக இருக்கும். எல்லா முயற்சிகளையும் சரியாக செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் அற்புதமாக நடக்கும். மன உறுதி அதிகரிக்கும். தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கக்கூடிய அமைப்பு ஏற்படும்.

யோகம்

எல்லா விஷயத்தையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். வலிகள் அனைத்தில் இருந்தும் விடுபெறக் கூடிய காலகட்டம். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வண்டிகள், மொபைல் போன் வாங்குவது, ஆடம்பரப் பெருள்கள் வாங்குவது போன்ற யோகம் ஏற்படும்.

சிறு தடைகள்

பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்வதைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் உத்தியோகம், வியாபாரம், படிப்பு, தொழிலில் சிறு சிறு தடைகள் ஏற்படும். அவர்களின் பழக்கவழக்கங்களால் தேவையில்லாத சங்கடங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மனசோர்வும், சங்கடமும், ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகளால் மன வருத்தங்கள் ஏற்படும்.

நம்பாதீர்கள்

தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு என நம்முடைய மேலதிகாரிகள் ஏதாவது ஒரு குறைகளை கண்டுபிடிப்பதிலேயே இருப்பார்கள் என்பதால் எல்லா விஷயத்திலும் கவனமாக இருப்பது நன்மை பயக்கும். வெளியிடத்தில் இருந்து உங்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் வந்தாலும் அதனை நம்பாமல் இருப்பது நல்லது. இளம் படைப்பாளர்கள், கலைஞர்கள், சினிமா துறையினர், இசைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு பெரிய கெளரவங்களும், வெற்றியும் ஏற்படும்.

கவனம்

உறவுக்காரர்களால் தேவையில்லாத உபத்திரவங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. நம்முடன் பழகியவர்கள் நமக்கு எதிராக செல்வதற்கான வாய்ப்புள்ளதால் கவனமாக இருப்பது நல்லது. பயணங்களில் அதீத விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படக்கூடிய காலகட்டம். எந்த விஷயத்திலும் அவசரம் காட்டாமல் இருப்பது நல்லது.

வழிபாடு

ஆரோக்கியத்தில் வயிறு சார்ந்த பிரச்சனைகளில் மிகுந்த கவனத்துடன் இருப்பது நன்மை பயக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும். பெருமாள் வழிபாடு ஏற்றத்தைத் தரும். பெருமாளுக்கு அபிஷேகம் செய்வது, இனிப்பு வாங்கி நைவைத்தியம் செய்வது நன்மையைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+