நாளைக்கே ஏன்? காங் - திமுக பிளவு டூ உபி தேர்தல் வரை! தொகுதி மறுவரையறை மசோதாவால் பாஜகவிற்கு 6 பலன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத்தில் நாளைக்கே மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு கொண்டு வருகிறது. இந்த மசோதாக்களை நாளையே கொண்டு வருவதன் பின்னணியில் 6 முக்கிய பலன்களை பாஜக முன்வைத்துள்ளது. காங்கிரஸ் - திமுகவின் பிளவு, உத்தர பிரதேச தேர்தல் மற்றும் 'சார்' எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையில் ஏற்பட்ட சர்ச்சையை மடைமாற்றம் செய்தல் உள்பட 6 பலன்கள் என்னென்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

what-are-the-6-benefits-for-bjp-due-to-demilitation-bill-tabled-on-tomorrow-details-here

முதல் பலன்

தற்போது காங்கிரஸ்-திமுக கூட்டணியில் பிளவு உள்ளது. திமுகவை விட்டு காங்கிரஸ் கட்சி தவெகவுடன் சென்றுவிட்டது. இந்த பிளவை பயன்படுத்தி திமுகவின் ஆதரவை பெற வேண்டும். இந்த மசோதாக்களை நிறைவேற்ற லோக்சபாவில் 3ல் 2 பங்கு எம்பிக்களின் ஆதரவு வேண்டும். பாஜகவுக்கு அவ்வளவு எம்பிக்கள் இல்லை. 54 எம்பிக்கள் குறைவாக உள்ளனர்.

இதனால் திமுகவின் 22 எம்பிக்கள் உள்பட பிற கட்சிகளின் எம்பிக்களின் ஆதரவை பெற்று நிறைவேற்ற மத்திய அரசு தயாராகி உள்ளது. இதனால் தான் முக ஸ்டாலின் வைத்த கோரிக்கையான மாநிலங்கள் வாரியாக தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் அதிகரிக்க வேண்டும். அதன்பிறகு 2051ம் ஆண்டு வரை தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தக்கூடாது என்பதற்கு மத்திய அரசு 'ஓகே' சொல்லி இந்த மசோதாவை நாளை கொண்டு வர உள்ளது. இதன்மூலம் லோக்சபா தொகுதியை அதிகரிப்பது, மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை பாஜகவின் கனவு நனவாகி விடும்.

2வது பலன்

'இந்தியா' கூட்டணியில் உள்ள திமுகவை தவிர சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் அணி) கட்சியும் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இது கூட்டணி கட்சிகளுக்குள் வெளிப்படையான மோதலை உருவாக்கி உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிராவில் சிவசேனா (உத்தவ்தாக்கரே) கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) அணியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதேபோல் காங்கிரஸ் கட்சியினரும் திமுக, தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) அணியை கடுமையாக சாடி வருகின்றனர். இது 'இந்தியா' கூட்டணிக்குள் நிலவும் குழப்பத்தை இன்னும் அதிகமாக்கி உள்ளது. மக்கள் மத்தியில் இது அதிருப்தியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இது பாஜகவின் 2வது பலனாகும்.

3வது பலன்

கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் இந்த மசோதா தோற்கடிக்கப்பட்டது. அதன்பிறகு எதிர்க்கட்சிகளின் குழப்பத்தை சரியாக பயன்படுத்தி பாஜக ஒவ்வொரு தரப்பிடமும் பேசி ஆதரவை கோரியுள்ளது. எப்படியாவது இந்த மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த மத்திய பாஜக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த மழைக்கால கூட்டத்தொடரை முறைப்படி முடிக்கவில்லை. நாடாளுமன்றத்தை பொறுத்தவரை ஒவ்வொரு கூட்டத்தொடர் முடிவிலும் Adjournment Sine Die என்று கூட்டத்தொடர் முடிக்கப்படும். அதன்பிறகு சில நாட்களில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்ததாக ஜனாதிபதி அறிவிப்பு வெளியிடுவார். இப்படி நாடாளுமன்றத்தை முடித்தால் அடுத்ததாக புதிய கூட்டத்தொடர கூட்ட 15 நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட வேண்டும்.

ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு Prorogation என்ற முறையில் தற்காலிகமமாக மட்டுமே ஒத்திவைத்தது. இப்படி செய்யும்போது மத்திய அரசால் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் நாடாளுமன்றத்தை குறுகிய கால அளவில் கூட்டம் முடியும். சபாநாயகர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி வெறும் 2 முதல் 4 நாட்கள் முன்னறிவிப்பில் சபையை கூட்டலாம். இந்த யுக்தியை தற்போது மத்திய பாஜக அரசு பயன்படுத்தி உள்ளதால் தான் திமுக, தேசியவாத காங்கிரஸை (சரத்பவார் அணி) மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் காங்கிரஸ் உள்ளிட்ட 'இந்தியா' கூட்டணி கட்சிகளால் உடனடியாக அவர்களை சமாதானப்படுத்த முடியவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்த பாஜக நினைக்கிறது. இது 3வது பலனாகும்.

4வது பலன்

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இப்போது தொகுதி மறுவரையறை மற்றும் 33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு மசோதா உள்ளிட்டவை ஒன்றாக கொண்டு வரப்படுகிறது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி உத்தர பிரதேசத்தை மையப்படுத்தி செயல்பட்டு வருகிறது. தற்போது அங்கு அந்த கட்சியின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.

இப்போது அவரது கட்சி எதிர்ப்பு தெரிவித்தால் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கும், பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கு அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி எதிராக உள்ளது என பிரசாரம் செய்யலாம் என பாஜக கணக்கீட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது பாஜகவின் 3வது பலனாகும்.

5வது பலன்

2029ம் ஆண்டுக்கு முன்பாக மகளிருக்கு 33சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இதனால் இப்போது தொகுதி மறுவரையறை மற்றும் 33 சதவீத மகளிர் இடஒதுக்கீட்டுக்கு மசோதாவிற்கு ஒப்புதல் பெற்றால் மட்டுமே அதனை 2029ம் ஆண்டுக்குள் கொண்டு வந்து செயல்படுத்த ஏதுவாக இருக்கும். அதோடு பிரதமர் மோடியும் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை வாக்கறுதியாக அளித்துள்ளார். அதனை நிறைவேற்றி விடலாம் என்பது பாஜகவின் இன்னொரு கணக்கு.

6வது பலன்

தற்போது நாடாளுமன்றம் சிறப்பு கூட்டம் என்பது மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறுவதற்கு மட்டுமே கூட்டப்படுகிறது. இதன்மூலம் இந்திய அளவில் லோக்சபா மற்றும் சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை நிறைவேற்றுவதில் பாஜக காட்டும் ஆர்வத்தை மக்கள் மத்தியில் எளிதாக எடுத்து செல்ல முடியும்.

அதேவேளையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையில் எழுந்த சர்ச்சைகளை எளிதாக மத்திய அரசால் மறைக்க முடியும் என்பது பாஜகவின் மற்றொரு கணக்காக உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+