மு.க.ஸ்டாலினை சந்திக்க சென்னை வந்து காத்திருக்கும் தலைவர்கள் யார் யார்? லிஸ்ட் இதோ!
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க சென்னை வந்து காத்திருக்கும் இந்தியா கூட்டணி தலைவர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம். டெல்லியில் இருந்து சென்னை வந்த இந்தியா கூட்டணி தலைவர்கள், அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலில் காத்திருக்கிறார்கள்.
தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில் அதை மறுபரிசீலனை செய்யக் கோரி, திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று சென்னை வந்துள்ளனர்.

அவர்கள் 3 மணிக்கெல்லாம் சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ள நிலையில் விமான நிலையத்திற்கு அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஓய்வு எடுத்து வருகிறார்கள்.
மாலை 4.30 மணிக்கு திமுக தலைவரை அவரது இல்லத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்தித்து பேச இருக்கிறார்கள். இந்த நிலையில் மு.க.ஸ்டாலினை சந்திக்க காத்திருக்கும் தலைவர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம்.
சோனியா காந்தி
மல்லிகார்ஜுன கார்கே
ராகுல் காந்தி
டி.கே.சிவக்குமார்
வி.டி.சதீஷன்
ரேவந்த் ரெட்டி
மம்தா பானர்ஜி
அபிஷேக் பானர்ஜி
பேபி
கபில் சிபல்
கே.சி.வேணுகோபால்
பிரணவ் ஜா
அபய் குமார் சின்ஹா
ராஜீவ் ராய்
உள்ளிட்டோர் ஸ்டாலிநை சந்திக்க காத்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications
