"அவசரமாக வாங்க"ன்னு சொன்னதும் பதறிஅடித்து ஓடிய மருத்துவர்! குமரி லாட்ஜில் நடந்த கொடுமை! 3 பேர் கைது
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் மருத்துவரை தாக்கி பணம் நகை கொள்ளை அடித்த கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஏற்கெனவே பலரை ஏமாற்றி ஆன்லைன் மூலம் ஏமாற்றி பணம் நகை பறித்தது அம்பலமாகியுள்ளது.
குமரி மாவட்டம் குலசேகரம் காவல் நிலைய எல்லைக்குட திற்ப்பரப்பு அருவிக்கு அருகாமையில் உள்ள லாட்ஜில் கடந்த 22.11.2026 அன்று இரவு, ஆன்லைன் செயலிகள் வாயிலாக அருமனையை சேர்ந்த மருத்துவரான விபின் குமாரை தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அவசரமாக மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதால் திற்பரப்பு அருவி அருகே வருமாறு அழைத்துள்ளார்.

அங்கு சென்ற மருத்துவர் விபின் குமாரை , அருகிலுள்ள தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று தனிமையில் இருக்குமாறு கூறியுள்ளனர். அப்போது, ஏற்கனவே அங்கு காத்திருந்த அடையாளம் தெரியாத நபரின் நண்பர்கள் சிலர், மருத்துவரை தாக்கி, அவரது செல்போனைப் பயன்படுத்தி வங்கிக் கணக்கிலிருந்து GPay பரிவர்த்தனை மூலம் 58 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துள்ளனர்.
மேலும், பணப் பரிவர்த்தனைக்கான ரகசிய PIN எண்ணை தெரிவிக்க மறுத்ததால், மீண்டும் தாக்கி மிரட்டி PIN எண்ணைப் பெற்றுள்ளனர். இதுமட்டுமின்றி, புகார்தாரர் அணிந்திருந்த 9 சவரன் தங்கச் செயின், 2 சவரன் தங்க வளையல், தங்க மோதிரங்கள், செல்போன் மற்றும் 600 ரூபாய் ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றையும் பறித்துச் சென்றனர்.
இதுதொடர்பாக புகாரின் அடிப்படையில் குலசேகரம் காவல் நிலையத்தில் செய்யப்பட்டது.
இதையடுத்து, தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த விசாரணையில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னமருது (29), தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த வேல்குமார் (18) மற்றும் ஒரு இளஞ்சிறார் என மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதுபோன்ற ஆன்லைன் டேட்டிங் செயலிகள் மூலம் ஏற்படும் நட்புகளை நம்பி, அறிமுகமில்லாத நபர்களை நேரில் சந்திப்பதைத் தவிர்க்க வேண்டும். தனிமையான இடங்களுக்கு அழைத்துச் சென்று பணம் மற்றும் உடைமைகளைப் பறிக்கும் சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications
