தனிமைப்படுத்தப்படும் காங்கிரஸ்!அதிர்ச்சி கொடுத்த திமுக, சரத் பவார், ஒய்எஸ் ஆர் காங்கிரஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'இந்தியா' கூட்டணியில் காங்கிரஸ் பிரதான கட்சியாக இருந்தாலும் கூட அவ்வப்போது தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் திமுகவும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் அணி ) தனிமைப்படுத்தி படாதபாடு படவைக்கிறது.

delimitation-bill-dmk-sharad-pawar-and-ysrcp-jolt-congress

'இந்தியா' கூட்டணியில் பிரதான கட்சியாக காங்கிரஸ் உள்ளது. ஆனால் ஒவ்வொரு மாநிலங்கள் சார்ந்த விஷயங்கள்என்று வரும்போது காங்கிரஸை 'இந்தியா' கூட்டணியில் உள்ள கட்சிகளே தனிமைப்படுத்தி வருவது காலம்காலமாக நடந்து வருகிறது.

உதாரணமாக 'இந்தியா' கூட்டணியில் உள்ள மம்தா பானர்ஜியின் கட்சி கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மேற்குவங்க தேர்தலில் காங்கிரஸை கழற்றிவிட்டது. அதேபோல் கேரளா சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரசும் வழக்கம்போல் தனித்தனியாக போட்டியிட்டன.

இப்படி 'இந்தியா' கூட்டணியில் காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் கூட கூட்டணி கட்சிகள் அதனை மதிப்பது இல்லை. இதற்கு காங்கிரஸ் கட்சியின் 'பெரிய அண்ணன்' மனப்பான்மை தான் முக்கிய விஷயம் என்ற குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து வருகின்றன.

அந்த வகையில் தான் தற்போது தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் 'இந்தியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக ஸ்டாலினின் திமுக மற்றும் மகாராஷ்டிராவில் செயல்பட்டு வரும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) கட்சிகளும் காங்கிரஸை கழற்றிவிட்டுள்ளன. தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு காங்கிரஸ், மம்தா பானர்ஜியின் கட்சி, 2 கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் திமுகவும், சரத்பாவாிரன் தேசியவாத காங்கிரஸ் அணியும் மசோதாவை ஆதரவு தெரிவித்துள்ளன.

நாளை நடைபெறவிருக்கும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசின் திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பதாக இந்த கட்சிகள் அறிவித்துள்ளன. இதன்மூலம் இருகட்சிகளும் காங்கிரஸ் கட்சியை தனிமைப்படுத்தி உள்ளன.

தொகுதி மறுவரையறை மசோதா கடந்த ஏப்ரல் மாதம் கொண்டு வந்தபோது திமுக, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் அணி எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் இப்போது ஆதரவு தெரிவித்துள்ளதன் பின்னணியில் 2 விஷயங்கள் உள்ளன. முக ஸ்டாலின் சார்பில் மத்திய அரசிடம், ''மாநிலங்கள் முழுவதும் ஒரே சீராக 50% என்ற அளவில் தொகுதிகளை உயர்த்த வேண்டும். 2051 வரை தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றக்கூடாது'' என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு மத்திய பாஜக அருசு செவிசாய்த்த நிலையில் தற்போது திமுக ஆதரவு தெரிவித்துள்ளது. திமுகவை பின்பற்றி தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) அணியும் ஆதரவு தெரிவித்துள்ளது.

இது காங்கிரஸ் கட்சிக்கு சிக்கலாக மாறி உள்ளது. ஏனென்றால் திமுகவிடம் 22 எம்பிக்களும், சரத்பவார் அணியிடம் 8 எம்பிக்களும் உள்ளன. இது மசோதாவை நிறைவேற்ற பாஜகவுக்கு பெரிய அளவில் உதவும். இதனால் தான் காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி மற்றும் 'இந்தியா' கூட்டணி கட்சிகளை சேர்ந்த மம்தா பானர்ஜி உள்பட பலரும் முக ஸ்டாலினை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பை தொடர்ந்து அனைத்து தலைவர்களும் தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் அணியினரை சந்தித்து பேச உள்ளனர்.

ஆனால் திமுகவை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியின் துரோகத்தை மறக்கவில்லை.கடந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸில் போட்டியிட்டு 5 பேர் எம்எல்ஏக்கள் ஆகினர். இவர்கள் கட்சி மேலிடம் சொன்னதன் அடிப்படையில் தவெகவிற்கு ஆதரவாக மாறினர். 2 பேர் அமைச்சர் பதவிகளையும் பெற்றுள்ளனர். ஆனால் காங்கிரஸ், எந்த வார்த்தையும் சொல்லாமல் கூட்டணியை மாற்றியதோடு, குறைந்தபட்சம் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்றததை நினைத்து நன்றி கூட சொல்லவில்லை என்பது திமுகவிற்கு ஆறாத வடுவாக உள்ளது.

அதேபோல் தென்னிந்தியாவில் இன்னொரு முக்கிய கட்சியாக ஆந்திராவின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைவராக உள்ளார். இவரது கட்சிக்கு 4 எம்பிக்கள் உள்ளனர். இவர் பாஜக மற்றும் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் இருகூட்டணியில் இல்லாமல் உள்ளார். ஆனால் திடீரென்று அவர் இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுவும் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+