"Go Back Congress" பதாகையுடன் வந்த சரண்யா! அமைச்சர்கள் சரத், விஸ்வநாதன் மீது புகார் அளித்தவராமே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த திமுகவின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யக் கோரி திமுக தலைவர் ஸ்டாலினை அவரது வீட்டில் காங்கிரஸ் கட்சியினர் சந்திக்கவுள்ள நிலையில் "Go back Congress" என்ற பதாகை ஏந்திய பெண் யார் என்பது குறித்தும் அவரது பின்னணி என்ன என்பது குறித்தும் தெரிந்துக் கொள்ளலாம்.

நாளை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வரும் தொகுதி மறுவரையறை மசோதாவை தோற்கடிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலினிடம் ஆதரவு கேட்பதற்காக இந்தியா கூட்டணி கட்சியினர் சென்னை வந்திருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி, மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் உள்ளிட்டோர் வந்திருக்கிறார்கள்.

advocate Saranya

சித்தரஞ்சன் சாலை

அவர்கள் சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலினின் வீட்டிற்கு வருகை தருகிறார்கள். சட்டசபைத் தேர்தலுக்கு பிறகு திமுகவிடம் மரியாதை நிமித்தமாக கூட சொல்லிக் கொள்ளாமல் தவெகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து 2 அமைச்சர் பதவிகளையும் பெற்றுக் கொண்டது. ஆனால் அதன் பிறகு திமுகவை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து விமர்சித்து வந்தது. இது திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

advocate Saranya

இந்த நிலையில் ஸ்டாலினை காங்கிரஸ் கட்சியினர் சந்திக்க வருகிறார்கள் என தெரியவந்ததும் சமூகவலைதளங்களில் திமுகவினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் ஸ்டாலினின் சித்தரஞ்சன் சாலையில் உள்ள வீட்டருக்கே பெண் ஒருவர் "go back congress" என்ற பதாகை ஏந்தியிருந்தார்.

தமிழகத்தில் பிரதமர் மோடி வந்த போது இது போன்ற Go back Modi என்ற பதாகைகள் காட்டப்பட்ட நிலையில் முதல்முறையாக காங்கிரஸ் கட்சிக்கு இது போன்ற பதாகை காட்டப்பட்டுள்ளது. இந்த பெண்ணை அங்கிருந்த போலீஸார் அப்புறப்படுத்தினர்.

advocate Saranya

பதாகை ஏந்திய பெண்

காங்கிரஸுக்கு எதிராக பதாகை ஏந்திய பெண், திமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த சரண்யா நடராஜன் . இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறாராம். திமுகவின் வழக்கறிஞர் அணியை சேர்ந்தவர். இவர் சாட்சி சட்ட நிறுவனம் என்ற நிறுவனத்தை தொடங்கி தனிப்பட்ட முறையில் வழக்கறிஞர் பணியை மேற்கொண்டு வருகிறார்.

பெ.விஸ்வநாதன் மீதும் புகார்

குற்றவியல் சட்டம், குடும்ப நல வழக்குகள், உரிமையியல் சட்டம், போக்சோ, பெண்கள் உரிமை சார்ந்த வழக்குகள் உள்ளிட்டவைகள எடுத்து நடத்தி வருகிறாராம். கடந்த ஜூன் மாதம் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நடந்த போது பள்ளி சிறுமிகளின் காலை அழுத்திவிட்டது, தவறான தொடுதல் என கூறி அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி டிஜிபியிடம் புகார் அளித்தவர் சரண்யாதான்.

advocate Saranya

அமைச்சர் சரத்குமார் மீது புகார்

அதே போல், தவெக அமைச்சர் சரத்குமார் ஒரு ஸ்டேடியத்தில் போதை பொருளை நுணுக்குவது போன்ற வீடியோ வைரலானது. ஆனால் சரத்குமார் இதை மறுத்தார். தனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவருக்கு கொடுப்பதற்காக மருந்தை நுணுக்கியதாக விளக்கமளித்திருந்தார். இந்த வீடியோ குறித்து சரத்குமாரிடம் விசாரணை நடத்த வேண்டும் என வழக்கறிஞர் சரண்யா நடராஜன் கடந்த ஜூன் மாதம் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+