ஸ்டாலின் VS ராகுல் காந்தி.. கட்டிப்பிடிக்க முதலில் கையை நீட்டியது யார்? நடந்தது இதுதான்! வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக - காங்கிரஸ் இடையே மோதல் உள்ளது. இதற்கிடையே தான் இன்று தனது வீட்டுக்கு வந்த காங்கிரஸ் தலைவர்களை முக ஸ்டாலின் வாசல் வரை சென்று வரவேற்றார். அதோடு முதல்வர் ஸ்டாலினும், ராகுல் காந்தியும் கட்டியணைக்கும் போட்டோக்கள் வெளியாகின. இதனால் திமுக - காங்கிரஸ் மோதல் முடிவுக்கு வந்ததா? என்ற கேள்விகள் எழுந்த நிலையில் கட்டிப்பிடிக்க யார் முதலில் கையை நீட்டியது என்பது தொடர்பான விவரம் வெளியாகி உள்ளது.

mk-stalin-vs-rahul-gandhi-who-reached-out-first-for-the-hug-details-here

மத்திய அரசு நாளை கொண்டு வரும் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை திமுக ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் என்பதற்காக திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து 'இந்தியா' கூட்டணி கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

சென்னையில் உள்ள முக ஸ்டாலின் இல்லத்துக்கே காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, 'இந்தியா' கூட்டணியை சேர்ந்த மம்தா பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் பேபி உள்பட பலரும் சென்றனர்.

தலைவர்களை முக ஸ்டாலின் தனது வீட்டு வாசலில் வந்து வரவேற்றார். அதன்பிறகு அடுத்த சில நிமிடங்களில் ராகுல் காந்தி - முக ஸ்டாலின் ஆகியோர் கட்டியணைத்து கொள்வது போன்ற போட்டோக்கள் வெளியாகின. திமுக - காங்கிரஸ் இடையே இருக்கும் மோதலுக்கு நடுவே இந்த சம்பவம் நடந்தது. இந்நிலையில் தான் தற்போது யார் முதலில் கட்டிப்பிடித்தது? என்பது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.

அந்த வீடியோவில் வீட்டு வாசலில் நின்ற ஸ்டாலின் முதலில் சோனியா காந்தி கையில் மஞ்சள் நிற சால்வையை வழங்கி வரவேற்கிறார். அதற்கு அடுத்து மல்லிகார்ஜுன கார்கே கையில் சால்வை வழங்கி வரவேற்கிறார். அடுத்ததாக ராகுல் காந்தியின் முன்நோக்கி வருகிறார். அவரது தோளில் ஸ்டாலின் சால்வை அணிவிக்கிறார். இருவரும் கைக்கொடுக்கின்றனர்.

இந்த சமயத்தில் ராகுல் காந்தி தான் கட்டியணைக்கும் வகையில் கையை நீட்டுகிறார். அதன்பிறகு தான் முக ஸ்டாலின் பதிலுக்கு ஆரத்தழுவி கொள்கிறார். இதனை வீடியோ உறுதி செய்துள்ளது. இதன்மூலம் 'சகோதரர்' என ராகுல் காந்தி இன்று முக ஸ்டாலினை அழைத்தாலும் நடந்த முடிந்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி செய்த துரோகத்தை முக ஸ்டாலின் இன்னும் மறக்கவில்லையோ என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+