திமுகவுக்கு துரோகம் செய்தவர்களே துரோகம் என்கிறார்களா?.. காங்கிரஸை சீண்டிய வானதி
கோவை: மத்திய பாஜக அரசு, நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்யவுள்ளது. கடந்தாண்டு இந்த மசோதா கொண்டு வரப்பட்டபோது திமுக எதிர்த்தது. இந்தமுறை பல்வேறு எதிர்ப்புகளை மீறி மசோதாவை ஆதரிப்பதாக திமுக கூறியுள்ளது. தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் ஆதரவளித்த திமுகவுக்கு பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், திமுகவுக்கு துரோகம் செய்தவர்களே, திமுக துரோகம் செய்ததாகப் பேசுகின்றனர். இது என்ன அநியாயம்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: திமுக துரோகம் செய்துவிட்டதாக காங்கிரஸார் கூறுகின்றனர்.

துரோகம் செய்தவர்களே..
தி.மு.க.வின் கட்சியின் ஆதரவோடு, தி.மு.க ஊழியர்களின் உழைப்பில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பணத்தில் வெற்றி பெற்றுவிட்டு தி.மு.க.வுக்கு துரோகம் செய்து விட்டு சென்றவர்கள் எல்லாம் திமுகவை பார்த்து இன்று துரோகம் என்று பேசுகிறார்கள் என்ன அநியாயம் இது.
மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி எங்கு இருக்கிறார்கள்?. இவர்கள் பலம் என்ன?. இவர்களது வாக்கு சதவீதம் என்ன? இது எல்லாம் அனைவருக்கும் தெரியும். ஆனால் தி.மு.க வோடு ஆதரவோடு ஜெயித்துவிட்டு இன்று அவர்களைப் பார்த்து துரோகிகள் என்று கூறினால் உங்களுக்கெல்லாம் என்ன பேரு என்று கேள்வி எழுப்பினார்.
நிபந்தனையுடன் திமுக ஆதரவு
தென் மாநிலங்கள் தொகுதிகளை இழந்துவிடக் கூடாது என்று திமுகவினர் நிபந்தனைகளுடன் ஆதரவு தெரிவிக்கின்றனர். அதற்கு தான் பிரதமர், உள்துறை அமைச்சர் சரியான நடவடிக்கை எடுத்துள்ளனர். நாம் தொகுதிகளை இழக்கவில்லை, எந்த இடத்திலும் தமிழகம் வஞ்சிக்கப்படவில்லை, எந்த மாநிலத்திலும் வஞ்சிக்கின்ற எண்ணம் பி.ஜே.பி க்கும், பிரதமர் மோடி அவர்களுக்கும் கிடையாது என்றார்.
சட்டம் - ஒழுங்கும், பெண்கள் பாதுகாப்பும் தி.மு.க ஆட்சியில் இருந்தது போன்று தான் உள்ளது. திருப்பரங்குன்றம் கோவிலில் தீபமேற்ற முடியாது என தி.மு.க அரசு பிடிவாதம் பிடித்தது. அதைத் தான் தற்பொழுது த.வெ.க அரசும் செய்தது. ஆனால், உச்சநீதிமன்றத் தீர்ப்பால் தீபம் ஏற்றப்பட்டுவிட்டது. இந்த நேரத்தில் ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.


Click it and Unblock the Notifications
