சோனியா, ராகுல் சென்னையில் முகாமிட்டுள்ள நேரத்தில்.. வடக்கில் காங்கிரஸ்க்கு அதிர்ச்சி கொடுக்கும் ஹேமந்த் சோரன்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை திமுக எடுத்துள்ள நிலையில், இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று சென்னை வந்து திமுக தலைமையை சந்தித்துள்ளனர். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ள அதே நேரத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவு அளிக்கலாம் என்று வெளியாகியுள்ள தகவல் இந்தியா கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்றும் முனைப்பில் மத்திய அரசு உள்ளது. இதனை முறியடிக்கும் முயற்சியில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி தீவிரமாக உள்ளது.

Congress facing another potential setback Hemant Soren may support Govt move in Delimitation Bill

ஸ்டாலின் இல்லத்தில் காங்கிரஸ் தலைவர்கள்

ஆனால் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவளித்ததுள்ளது இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது. இதையடுத்து, இந்தியா கூட்டணி தலைவர்களான மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்திக்க சென்னைக்கு வந்தனர்.

இன்று மாலை 4.30 மணியளவில் ஸ்டாலினை சந்தித்து பேசினர். மு.க ஸ்டாலின் வாசலுக்கே வந்து வரவேற்றார். ராகுல் காந்தியை கட்டியணைத்து ஸ்டாலின் வரவேற்றார். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் மனதை மாற்றும் முயற்சியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஈடுபட்டுள்ள அதேநேரத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

6 எம்பிக்கள் உள்ளனர்

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா இந்த முடிவை எடுத்து இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்றாலும், மசோதாவுக்கு ஆதரவு அளிக்கும் முடிவையே எடுக்க திட்டமிட்டு இருப்பதாக ஆங்கில தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

இது எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்த முயற்சித்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்கள் தொடர்பாக மத்திய அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இந்த நிலையில்தான் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளதாக தெரிகிறது.

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு மொத்தம் 6 எம்.பி.க்கள் உள்ளனர். 3 லோக்சபா எம்பிக்கள் மற்றும் 3 ராஜ்யசபா எம்பிக்கள் உள்ளனர். எனவே, இக்கட்சியின் இறுதி முடிவு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஹேமந்த் சோரன் தலைமையில் அவரது இல்லத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் எம்பிக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் தற்போதைய நிலை

காங்கிரஸ் கட்சி: கடும் எதிப்பு
திமுக: ஆதரவு என அறிவிப்பு
தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்): ஆதரவு
சிவசேனா (உத்தவ்): எதிர்ப்பு
திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் காங்கிரஸ்க்கு ஆதரவாக உள்ளன. பாஜக கூட்டணியில் இடம் பெறாவிட்டாலும் ஒஎஸ்.ஆர்.சிபி உள்ளிட்ட கட்சிகள் மத்திய அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கும் என பேசப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+