6 மாதங்கள் கழித்து பரபரப்பான சித்தரஞ்சன் சாலை! "கிங்மேக்கர் ஸ்டாலின்" முழக்கம்! அதிரும் சென்னை

Subscribe to Oneindia Tamil

சென்னை: 6 மாதங்கள் கழித்து திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினின் சித்தரஞ்சன் சாலை பரபரப்பாக காணப்படுகிறது. கிங்மேக்கர் ஸ்டாலின் என திமுகவினர் முழக்கங்களை எழுப்பி வருகிறார்கள்.

தமிழக அரசியலில் எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டம், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன், கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் உள்ளிட்டவை முக்கியவத்துவம் வாய்ந்தவை ஆகும். இந்தச இல்லங்களில் பல்வேறு அரசியல் திருப்புமுனைகளை ஏற்படுத்தும் முடிவுகள் எடுக்கப்பட்டன. பல்வேறு தேசிய தலைவர்கள், மாநில தலைவர்கள் வந்து சென்றிருக்கிறார்கள்.

MK Stalin

அது போல் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினின் சித்தரஞ்சன் சாலையும் அரசியல் தலைவர்கள் மத்தியில் பரீட்சயமானது. கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக 10 ஆண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்தது. அப்போது ஸ்டாலின் முதல் முறையாக முதல்வரானார்.

அப்போது முதலே ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள ஸ்டாலினின் வீடு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. முதல்வர் வீடு இருக்கும் பகுதி என்பதால் அங்கு 24 மணி நேரமும் போலீஸார் பாதுகாப்பு பணியில் இருக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளாக இந்த பகுதிக்கு அரசு அதிகாரிகள் வருவதும், அரசியல் கட்சியினர் வருவதுமாக இருந்தது.

இந்த நிலையில்தான் கடந்த 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது திமுக ஆட்சியை இழந்தது. ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தோல்வியை சந்தித்தார். இதனால் முன்னாள் முதல்வர் என்பதற்கான புரோட்டோக்காலுக்குரிய போலீஸாரே அவரது வீட்டில் பாதுகாப்பு பணியில் இருக்கிறார்கள். ஆட்சி மாற்றத்திற்கு பிறகு ஸ்டாலின் சென்ற கார் கூட டிராபிக் சிக்கி நின்று நிதானமாக போனதை பார்த்தோம்.

ஸ்டாலின் சட்டசபைக்கு கூட வரமுடியாமல் போனதால் அவரை தவெகவினரும் முதல்வர் விஜய்யும் கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்த நிலையில்தான் தனது ஒற்றை நிலைப்பாட்டால் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவு நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யுமாறு ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்க இந்தியா கூட்டணி தலைவர்கள் அவரது வீட்டில் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இதனால் இன்றைய தினம் சித்தரஞ்சன் சாலையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான திமுக தொண்டர்கள் வந்துள்ளனர். அரசியல் கட்சி தலைவர்களின் கார்கள் வருவதும் போவதுமாக இருக்கிறது. சுமார் 6 மாதங்கள் கழித்து மீண்டும் பிஸியாகியுள்ளது சித்தரஞ்சன் சாலை!

ஸ்டாலின் தற்போது எம்எல்ஏவாக இல்லாவிட்டாலும் அவரை தேடி ஒட்டுமொத்த டெல்லியே வந்திருக்கிறது என்றால் அதுதான் அவருடைய பவர், திமுகவின் பலம்! இதை புரியாமல் அப்பாவை காணோம்னு கிண்டல் செய்கிறார்கள். தேசிய அரசியலில் திமுகவுக்கு மரியாதை என்ன என்பதை இனியாவது தவெகவுக்கு புரியுமா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+