காங்கிரஸ் கோரிக்கையை நிராகரித்த திமுக! தொகுதி மறுவரையறை மசோதா.. ஆதரவு நிலைப்பாட்டில் உறுதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நியாயமான மறுவரையறையை ஆதரிக்கிறோம் என்று திமுக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு எதிரான எந்த ஒரு முடிவையும் திமுக ஒரு காலத்திலும் எடுக்காது என்று ஸ்டாலின் - சோனியா காந்தி சந்திப்பு நிறைவடைந்த சில நிமிடங்களில் திமுக ஐடி விங் பதிவினை வெளியிட்டுள்ளது.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாக திமுக அறிவித்துள்ள நிலையில், இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று சென்னைக்கு வந்தனர். திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 1 மணி நேரம் 20 நிமிடம் ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

DMK rejects Congress s request firm on supporting the delimitation bill

சோனியா காந்தி, ராகுல், கார்கே உள்ளிட்டோரை கார் வரை வந்து ஸ்டாலின் வழியனுப்பி வைத்தார். பேச்சுவார்த்தை முடிந்த பிறகு வெளியே வந்த இந்தியா கூட்டணி தலைவர்கள் உற்சாகம் இன்றி காணப்பட்டனர். குறிப்பாக ராகுல் காந்தி இறுக்கமான முகத்துடனேயே வெளியே வந்தார். ஸ்டாலினை சந்தித்துவிட்டு வெளியே வந்த ராகுல் காந்தி, உடனடியாக தனது செல்போனில் தொடர்பு கொண்டு யாரிடமோ பேசினார். பின்னர் வேனில் ஏறிய பிறகும் செல்போனை பார்த்தபடியே சோகத்துடன் அமர்ந்திருந்தார்.

இந்நிலையில் சந்திப்பு முடிந்த சில நிமிடங்களிலேயே திமுக ஐடிவிங்கில் இருந்து ஒரு பதிவு வெளியானது. அதில், நியாயமான மறுவரையறையை ஆதரிக்கிறோம் என்று திமுக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு எதிரான எந்த ஒரு முடிவையும் திமுக ஒரு காலத்திலும் எடுக்காது..

முன்பு திமுக எதனால் எதிர்ப்பு

நம் எம்.பி. இடங்கள் 39-லிருந்து 31 அல்லது 32 ஆகக் குறையும் ஆபத்து இருந்தது.

நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பங்கு 5.71% -5.89% சுருங்கும் நிலை.

2027 கணக்கெடுப்பு வரையே பாதுகாப்பு; எளிதாக இடங்கள் குறையும் அபாயம்.

தற்போது திமுக எதனால் ஆதரவு

நம் எம்.பி. இடங்கள் குறையாமல் 59 ஆக உயரும் வாய்ப்பு.

தமிழ்நாட்டின் பங்கு 7.23% பாதுகாக்கப்படும் நிலை.

2051 வரை பாதுகாப்பு; 25 ஆண்டுகளுக்கு நம் இடங்கள் குறையாது.

என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+