முழு தேசமும் உங்கள் முற்றத்தில்.. மு.க ஸ்டாலின் வீட்டிற்கு வந்த தேசிய தலைவர்கள்! ஆ ராசா போட்ட பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை திமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று ஸ்டாலின் வீட்டிற்கே வந்து பேசினர். இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் வந்த நிலையில், ஆ.ராசா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்றத்தில் நாளை மத்திய அரசு தாக்கல் செய்கிறது. இந்த மசோதா நிறைவேறினால், நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 815 வரை அதிகரிக்க உள்ளது. மாநிலங்களுக்கு இடையிலான தொகுதி பங்கீடு 2051 ஆம் ஆண்டு வரை மாற்றப்படாது. பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கவும் இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

A Raja praises - National leaders arrive at MK Stalin home entire nation in your courtyar

இந்த மசோதாவால் இந்தியாவின் ஜனநாயகம் முடிவுக்கு வந்துவிடும் என்று இந்தியா கூட்டணி கூறி வருகிறது. அதேநேரத்தில் மசோதாவுக்கு ஆதரவு அளிக்க திமுக முடிவு செய்துள்ளது. மசோதா நிறைவேற திமுகவின் ஆதரவு முக்கிய துருப்பு சீட்டு என்பதால், அந்த கட்சி எடுக்கப்போகும் முடிவுதான் மசோதா நிறைவேறுவதில் முக்கிய பங்கு வகிக்கும்.

எனவே இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டிற்கு நேரில் வந்து, மசோதா குறித்த மூடிவை மறு பரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தினர். சோனியா காந்தி, ராகுல் காந்தி, கார்கே, எம்.ஏ பேபி, கபில் சிபல், மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் ஸ்டாலின் வீட்டிற்கு வந்து தொகுதி மறுவரையறை தொடர்பாக பேசினர். 1 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தப்பட்ட போதும் திமுக தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. நாளைய மசோதாவுக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று திமுக கூறியுள்ளது.

இதற்கிடையே, ஸ்டாலின் வீட்டிற்கு தேசிய தலைவர்கள் வருகை தந்ததை குறிப்பிட்டு ஆ. ராசா, தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- தலைவர் கலைஞரை அவர் இல்லம் வந்து பார்த்துச்சென்ற குடியரசு தலைவர்களை பிரதமர்களை வரலாறு பதிவு செய்துள்ளது; அந்த புகழ் வெளிச்சம் பல கால இடைவெளியில் அவருக்கு வந்து சேர்ந்த அரசியல் கொடை; அதற்கு குறையாத கீர்த்தியை காலம் ஒரே நாளில் ஒற்றை நிகழ்வில் உங்களுக்கு வழங்கியுள்ளது. முழு தேசமும் உங்கள் முற்றத்தில்! வாழ்க நீ எம்மான்" என்று பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+