மசியாத ஸ்டாலின்.. சோனியா தனியாக பேசியுமா? காங்கிரஸ் கோரிக்கையை ஏற்கவில்லையா திமுக? என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் முடிவை மாற்றுவதற்காக சென்னைக்கு வந்த காங்கிரஸ் தலைவர்கள், ஸ்டாலினுடன் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்... இதில் சோனியா காந்தி தனியாகவும் ஸ்டாலினிடம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும் தனது நிலைப்பாட்டில் ஸ்டாலின் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டுவர உள்ள தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான திருத்தப்பட்ட மசோதாக்களுக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

Delimitation Bill

காங்கிரஸ் சீனியர் லீடர்ஸ்

இதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் இன்று சென்னை வந்து ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

ஸ்டாலினுடன் சமாதானம்

இந்த சந்திப்பு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்துள்ளது... அப்போது தொகுதி மறுவரையறை அமல்படுத்தப்பட்டால் தமிழ்நாட்டுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து சோனியா காந்தி விளக்கியிருக்கிறார்.. அடுத்த வருடமே இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டால் தமிழ்நாடு எப்படிப் பாதிக்கப்படும் என்பதை ஸ்டாலினும் எடுத்து சொல்லியிருக்கிறார்.

இதனிடையே, திமுக இந்த மசோதாவை ஆதரிக்க வேண்டாம் என்று காங்கிரஸ் தரப்பு வலியுறுத்தியுள்ளது. ஆனால், திமுக தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை..

அதுமட்டுமல்ல, திமுக இந்த மசோதாவை ஆதரிக்கவில்லையென்றால், அதற்கு பிறகு காங்கிரஸ் கட்சி என்ன செய்யப்போகிறது என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.. ஆனால், இதற்கு காங்கிரஸ் தரப்பில் தெளிவான பதில் அளிக்கப்படவில்லையாம்..

சோனியா பேசியும்

இதற்கு பிறகு சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் மட்டும் ஸ்டாலினிடம் தனியாக சில நிமிடங்கள் பேசினாராம்.. மற்ற தலைவர்கள் முன்னிலையில் பேசியும் ஸ்டாலின் தனது முடிவை மாற்றாததால், இருவரும் தனியாக பேசி சமாதானப்படுத்த முயன்றுள்ளனர்.. ஆனாலும் ஸ்டாலின் தனது முடிவில் உறுதியாக இருந்துள்ளார்.

ஆக, காங்கிரஸ் தலைவர்கள் நேரில் வந்து வலியுறுத்தியபோதும், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை..

ஐடி விங் பதிவு

இந்த சந்திப்பு முடிந்த சில நிமிடங்களிலேயே திமுக ஐடி விங் வெளியிட்ட பதிவும் கவனம் பெற்றுள்ளது. அதில், 'நியாயமான மறுவரையறையை ஆதரிக்கிறோம். தமிழ்நாட்டிற்கு எதிரான எந்த ஒரு முடிவையும் திமுக ஒரு காலத்திலும் எடுக்காது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நியாயமான தொகுதி மறுவரையறைக்கு ஆதரவு என்றும், தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரான முடிவுகளை ஏற்க மாட்டோம் என்றும் திமுக தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

என்னென்ன தாக்கங்கள்

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் ஸ்டாலின் காங்கிரஸின் வலியுறுத்தலையும் மீறி தனது முடிவில் உறுதியாக இருப்பது, தேசிய அளவில் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பில் மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.

நாடாளுமன்றத்தில் பாஜக அரசை எதிர்கொள்வதற்கான எதிர்க்கட்சிகளின் வியூகத்திலும் இது நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.. அதேசமயம், தமிழகத்தில் காங்கிரஸ் தவெகவுடன் இணைந்துள்ள சூழலில், திமுகவும் காங்கிரஸும் இந்த விவகாரத்தில் எடுக்கும் தனித்தனி நிலைப்பாடுகள் எதிர்கால அரசியல் நகர்வுகளிலும் கவனம் பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+