Always Tamil Nadu First! Risk எடுக்கவோ உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுக்கவோ இடமில்லை! முக ஸ்டாலின் பளிச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடாளுமன்றத்தில் நமக்குள்ள வலிமையைக் கொண்டு, அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தமிழ்நாட்டின் அரசியல் வலிமையைப் பாதுகாத்திருக்கிறோம். இதில் Risk எடுக்கவோ, உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்கவோ இடமில்லை எனவும், தென் மாநிலக் கட்சிகளுக்கு இது வாழ்வா, சாவா போராட்டம்! இம்மசோதாவை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை எனக் கூறியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.

MK Stalin DMK Delimitation Bill

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," #TamilNaduFirst - அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும்! அன்னை சோனியா காந்தி, திரு. கார்கே, திரு. ராகுல் காந்தி, சகோதரி மமதா பானர்ஜி, தோழர் எம்.ஏ. பேபி, மூன்று மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் என்னைச் சந்தித்து, தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பான கோரிக்கைகளைத் தெரிவித்தனர்.

தொடக்கத்திலிருந்தே தி.மு.க. முன்வைத்த கோரிக்கைகள் புதிய #DelimitationBill-இல் இடம்பெற்றுள்ளதை எடுத்துரைத்தேன். அதனை ஏற்றுக்கொண்ட அவர்கள், வேறு சில பிரச்சினைகளையும் தெரிவித்தனர். இம்மசோதா தோற்கடிக்கப்பட்டால், தமிழ்நாட்டுக்கான குறைந்தபட்சப் பாதுகாப்பையும் இழந்து விடுவோம்.

2027 ஜனவரியில் அமையவுள்ள தொகுதி மறுவரையறை ஆணையத்தில் தென் மாநிலங்கள் வஞ்சிக்கப்படுவதைத் தடுக்கும் நாடாளுமன்ற வலிமை நம்மிடம் இல்லை. 1971-க்குப் பிந்தைய எந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் #Delimitation நடந்தாலும் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவமும் அரசியல் வலிமையும் குறையும்! தென் மாநிலக் கட்சிகளுக்கு இது வாழ்வா, சாவா போராட்டம்! இம்மசோதாவை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. என்னைச் சந்தித்த கட்சிகளிடமும் மாற்றுத் திட்டம் இல்லை.

நாடாளுமன்றத்தில் நமக்குள்ள வலிமையைக் கொண்டு, அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தமிழ்நாட்டின் அரசியல் வலிமையைப் பாதுகாத்திருக்கிறோம். இதில் Risk எடுக்கவோ, உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்கவோ இடமில்லை! பேரறிஞர் அண்ணா தொடங்கி, தலைவர் கலைஞர், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வரை எங்களுக்கு ஒரே நிலைப்பாடுதான்! தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகப் போராடுவோம்! வெற்றி பெறுவோம்! Then, Now and Always: Tamil Nadu First!" எனக் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+