இஸ்ரேலில் ஆட்சி அமையுமா? நெதன்யாகு போடும் புது கணக்கு! பதறும் எதிர்க்கட்சி!

Subscribe to Oneindia Tamil

டெல் அவிவ்: இஸ்ரேலில் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து பல நாட்கள் ஆகியும், இன்னும் எந்த கட்சியும் ஆட்சியமைக்காமல் இருக்கிறது. காரணம் பெரும்பான்மை இல்லாதது தான். இப்படி இருக்கையில், எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி தற்போது புதிய ஒப்பந்தத்திற்குள் வந்திருக்கிறது.

எந்த அணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், சூழ்ச்சி முறை பிரதமர் அடிப்படையில்.. 'தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை' அமைப்பது குறித்து காபந்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசன்கோட்டும் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தை புதிய விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

Israel

அக்டோபர் 27 அன்று நடைபெற்ற 120 இடங்களுக்கான இஸ்ரேலிய நாடாளுமன்ற தேர்தலில், நெதன்யாகு மற்றும் ஐசன்கோட் ஆகிய இருவரின் அணிகளுக்கும் ஆட்சி அமைக்க தேவையான 61 இடங்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து டிசம்பர் 6ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைக்குமாறு.. எதிர்க்கட்சி தலைவர் காடிஐசன் கோட்டுக்கு அதிபர் ஐசக் அழைப்பு விடுத்திருக்கிறார்.

இந்த அழைப்பை தொடர்ந்து, ஐசன், நெதன்யாகுவுடன் கூட்டணி வைக்க திட்டமிட்டிருக்கிறார். இன்று இஸ்ரேல் தலைநகரில் உள்ள ராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற ஐசன்-நெதன்யாகு சந்திப்பில், இரு கட்சிகளுக்கு இடையேயான அதிகார பகிர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள நெதன்யாகு முன்வந்துள்ளார். இதன்படி அரசின் முதல் பாதையில் ஐசன்கோட் பிரதமராகவும், இரண்டாவது பாதியில் நெதன்யாகு பிரதமராகவும் பதவி வகிக்கலாம் என அவர் யோசனை தெரிவித்துள்ளார். ஈரான் உள்ளிட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு இந்த விட்டுக்கொடுப்புக்கு தயாராக இருப்பதாக நெதன்யாகு கூறியிருக்கிறார்.

என்னதான் அவர் விட்டுக் கொடுத்து முன்னாள் வந்தாலும் கூட.. அவர் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. வேண்டுமென்றே பேச்சுவார்த்தையை இழுத்தடித்து.. இன்னொரு தேர்தலை திணிக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருக்கின்றன. மட்டுமல்லாது, புதியதாக அமைய உள்ள அரசுக்குள், தீவிர வலதுசாரி தலைவரும், தேசிய பாதுகாப்பு அமைச்சருமான இடமார் பென்-க்விரை சேர்க்க வேண்டும் என நெதன்யாகு விரும்புவதும், அவரை வெளியேற்ற வேண்டும் என எதிர்கட்சி வலியுறுத்துவதும்.. பேச்சுவார்த்தைக்கு பெரும் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது.

'இடமார்' என்பவரை எதிர்க்கட்சிகளுக்கு ஆகாவே ஆகாது. எலியும்-பூனையும் போல இரு தரப்பும் இருக்கும். அப்படிப்பட்ட நபரை அரசுக்குள் கொண்டுவருவதை எப்படி எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொள்ளும்?

கடந்த 2020 ஆம் ஆண்டு பென்னி காண்ட்ஸுடன் இதேபோன்று சுழற்சி முறை ஒப்பந்தம் செய்து கொண்டு, பின்னர் ஆட்சியை கவிழ்த்து நெதன்யாகு ஏமாற்றியதை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. முன்னாள் பிரதமர் யாயிர் லாபிட், நெதன்யாகுவின் அறிவிப்பை தொடர் மோசடிக்காரரின் மற்றொரு வெளிப்படையான ஏமாற்று வேலை என கடுமையாக விமர்சித்துள்ளார். எனவே இஸ்ரேலில் புதியதாக ஆட்சி அமைவது தொடர்ந்து இழுபறியை சந்தித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+