டைகர் ஷெராஃப் முன்னாடியே குறிவைக்கப்பட்ட பிரபலம்? சல்மான், அமீர் கான் பேரை கேட்டதுமே பதறிய பாலிவுட்

  • சென்னை: மும்பையில் நடிகர் டைகர் ஷெராஃப் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட வழக்கில், இப்போது வெளியாகும் தகவல்கள் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தத் தாக்குதலுக்கு முன்பு நடிகர் சல்மான் கான் வீட்டையும், அமீர் கான், ரன்பீர் கபூர் உள்ளிட்ட பிரபலங்களின் வீடுகளையும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கண்காணித்ததாக கூறப்படுகிறது. இதனால், டைகர் ஷெராஃப் மட்டும்தான் அவர்களது இலக்காக இருந்தாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. என்ன நடக்கிறது மும்பையில்?

    Advertisement

    கடந்த அக்டோபர் 18-ம் தேதி மும்பை ஜூஹு பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்துக்கு டைகர் ஷெராஃப் வந்திருந்தார். அப்போது நடிகர் சமீர் கோச்சரின் மகள் சாராவின் 9-வது பிறந்தநாள் நிகழ்ச்சியும் அங்கு நடைபெற்றது.

    Advertisement

    டைகர் ஷெராஃப்

    குழந்தைகளுடன் போட்டோ எடுத்துக்கொண்ட டைகர் ஷெராஃப், அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற கொஞ்ச நேரத்திலேயே துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. அவரது காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் ஓட்டுநரும் மற்றொருவரும் காயமடைந்தனர். டைகர் ஷெராஃப் காயமின்றி தப்பினார்.

    மும்பை காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்த தகவல்களின்படி, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் கூட்டாளி எனக் கூறப்படும் அனில் பண்டிட்டின் தூண்டுதலின் பேரில் டைகர் ஷெராஃப் மீதான தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    2 பெண்கள் யார்

    டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது தொடர்பாக இதுவரை 10 பேர் கைதாகி உள்ளனர்.. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு தேவையான ஆயுதத்தை குற்றவாளிகளிடம் சப்ளை செய்தது தொடர்பாக ராதா, பபிதா என்ற 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ராதா மட்டுமே குற்றவாளி ஆவார்.. மும்பையில் குற்றவாளிகளிடம் துப்பாக்கியை டெலிவரி செய்ய ராதா கிளம்பியபோது, தன்னுடைய தோழி பபிதாவையும், கோயிலுக்கு போகலாம் வா, என்று சொல்லி அழைத்து சென்றுள்ளார்..

    Advertisement

    எனவே, இந்த ஆயுத விநியோகம், தாக்குதலுக்கான திட்டம் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது. இந்நிலையில் விசாரணையில் மேலும் பல பகீர் தகவல்கள் வெளியாகி வருகின்றன..

    சல்மான் கான் வீட்டைக் கண்காணித்தார்களா?

    அதாவது, டைகர் ஷெராப்புக்கு முன்பு, முதலில் சல்மான் கானை தான் இந்த கும்பல் குறி வைத்ததாம்.. இதற்காக அவரது மும்பை வீட்டையும் சுற்றி சுற்றி வந்து கண்காணித்துள்ளது.. ஆனால், சல்மான் வீட்டை சுற்றி பலத்த பாதுகாப்பு இருந்ததால்,அந்தத் திட்டத்தை கைவிட்டார்களாம்.. பிறகு, அமீர் கான், ரன்பீர் கபூர் உள்ளிட்ட நடிகர்களின் வீடுகளையும் அவர்கள் நோட்டமிட்டிருக்கிறார்கள்..

    அமிதாப் பச்சன், அக்ஷய் குமார் உள்ளிட்ட மற்ற பிரபலங்களின் வீடுகளையும் லிஸ்ட்டில் சேர்த்திருக்கிறார்கள்.. இதில், ரன்பீர் கபூரின் பாந்திரா வீட்டை, குற்றவாளிகள் பல நாட்களாகக் கண்காணித்தார்களாம்.. இறுதியாக, பாதுகாப்பு குறைவாக இருப்பதாக அவர்கள் கருதிய டைகர் ஷெராஃப் மீது கவனம் திரும்பிதாம்.. இவ்வளவும் விசாரணையில் இப்போது வெளிவந்துள்ளது.

    Advertisement

    பிரபலங்கள் வீடுகள்

    இதையடுத்து லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் அனில் பண்டிட்டின் பங்கு குறித்தும் விசாரணை நடக்கிறது. துப்பாக்கிகள் இன்னும் மீட்கப்படாத நிலையில், தாக்குதலுக்குப் பின்னால் இருந்தவர்கள் யார், ஆயுதங்கள் எங்கிருந்து பெறப்பட்டன, மற்ற பிரபலங்களின் வீடுகளைக் கண்காணித்ததன் பின்னணி என்ன என்பதைக் கண்டறிய மும்பை காவல்துறை தொடர்ந்து விசாரித்து வருகிறது.

    பிரபலங்களின் வீடுகளை கண்காணித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள், மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது..!!!

    English Summary

    Do You Know Which Bollywood Star Was Targeted Before Tiger Shroff? Salman Khan, Aamir Khan Link