234 தொகுதிகளுக்கும் குறி.. முதல்வர் விஜய் பாணியில் தனுஷ் பிளான்! ‘ஓம்' பட விழாவில் உடைந்த உண்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியபிறகு அவர் செய்தது போல் அதே பாணியை நடிகர் தனுசும் கையில் எடுத்துள்ளார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகள் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் மாணவர்களை குறிவைத்து தனுஷ் முக்கிய செயல்திட்டத்தை இன்னும் 10, 15 நாட்களில் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். அது என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

actor-dhanush-says-ac-free-tution-centre-will-be-starts-234-assembly-constituency-all-over-tamil-nad

நடிகர் தனுஷ் 'ஓம்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் மம்மூட்டி, சாய் பல்லவி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை ியக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி உள்ளார். சாய் அபியங்கர் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் நவம்பர் 20 ம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று நடந்தது.

இந்த விழாவில் நடிகர் தனுஷிடம் தொகுப்பாளர் ஒரு கேள்வி எழுப்பினார். அவர், ''234 தொகுதிகளிலும் இலவசமாக ஏசி கோச்சிங் சென்டர் கட்டப்போகிறீர்களா? டியூசன் நிறைய பேருக்கு கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். கல்வியில் நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றம் என்ன?'' என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு நடிகர் தனுஷ், ''ஆமாம் 234 என்று மட்டுமில்லை. தமிழ்நாடு முழுவதும் மொத்தமாக ஏசி டியூசன் சென்டர் அமைக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அந்த ஐடியாவில் இருக்கிறோம். ஆனால் மொத்தமாக பண்ண முடியாது. உடனடியாக ஸ்டார்ட் பண்ண முடியாது.

இன்னும் 10 அல்லது 15 நாட்களிலும் சென்னையில் 3 இடத்திலும், கன்னியாகுமரியில் ஒரு இடத்திலும் ஏசி டியூசன் சென்டர் உறுதியாக ஆரம்பிக்க போகிறோம். இந்த Term-க்குள் எங்களால் இன்னும் 10 இடங்களில் வேண்டுமானால் ஆரம்பிக்க முடியும் என்று நினைக்கிறேன். அடுத்த வருடத்தில் இருந்து அதற்கு அடுத்த வருடத்திற்குள் தமிழகம் முழுவதும் ஏசி டியூசன் சென்டர் உருவாக்க வேண்டும் என்பது தான் எங்களின் விருப்பம்'' என்றார்.

நடிகர் தனுஷின் இந்த அறிவிப்பு முதல்வர் விஜய்யின் பாணியை கையில் எடுப்பதுபோல் உள்ளது. ஏனென்றால் விஜய் அரசியலுக்கு வந்த புதிதில் 234 தொகுதிகளிலும் காமராஜர் டியூஷன் சென்டர் என்ற பெயரில் டியூசன் சென்டர் ஆரம்பிக்க போவதாக கூறியிருந்தார். பல இடங்களிலும் அவர் டியூசன் தொடங்கப்பட்டது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட வாரியாக 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வருகிறார்.

தற்போது வரை தனுஷ் மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடத்தாவிட்டாலும் கூட அவர் விஜய்யை போல் டியூசன் சென்டர் தொடங்குவதாக அறிவித்துள்ளார். அதுவும் ஏசி டியூசன் சென்டர். அதேபோல் தனுஷ் தனது ரசிகர் மன்றத்தை நற்பனி இயக்கமாக மாற்றியது, ரசிகர் மன்ற மகளிர் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டது உள்ளிட்டவை பார்க்கும்போது தனுஷ் விரைவில் விஜய் பாணியில் அரசியல் என்ட்ரி கொடுக்கத்தான் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+