ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி! வன்னியர் வாக்குக்கு குறி! யார் இந்த சந்தீப் ஆனந்த்?

  • சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த், தவெகவில் இணைந்த நிலையில் அவருக்கு கட்சியின் துணை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

    Advertisement

    அண்மையில் தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.எஸ்.எம். ஆனந்தன், எம்.சி.சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், கே.வி. ராமலிங்கம், எம். ஆனந்தன், கடம்பூர் ராஜு, பச்சைமால், வெல்லமண்டி நடராஜன், சிவபதி, வைகைச் செல்வன், எஸ்.வளர்மதி ஆகியோருக்கு துணை பொதுச் செயலாளர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

    Advertisement

    அது போல் திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்தும் தவெகவில் இணைந்திருந்தார். அவருக்கும் துணை பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 4-ஆம் தேதி முதல்வர் விஜய் முன்னிலையில் சந்தீப், தவெகவில் இணைந்திருந்தார்.

    இவருக்கு பதவி அளிக்கப்பட்டது வரவிருக்கும் தேர்தல்களில் வட மாவட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.

    வன்னியர் சமூகத்தில் செல்வாக்கு அதிகம் கொண்டதால் சந்தீப்புக்கு இந்த பெரிய பதவி வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

    யார் இந்த சந்தீப்

    தவெகவில் இணைந்த சந்தீப் ஆனந்த் தொழிலதிபர், கல்வியாளர், சமூக செயற்பாட்டாளர் என பன்முகங்களை கொண்டவர். இவர் அக்கார்டு நிறுவனங்களின் மேலாண் இயக்குநர். பல ஆயிரம் கோடி ரூபாயில் பிசினஸ் செய்து கொண்டிருக்கிறார். பாரத் கல்விக் குழுமத்தின் தலைவரும் இவரே!

    Advertisement

    அண்ணா பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்க என்ஜினியரிங் படித்துள்ளார். இருப்பினும் கம்ப்யூட்டர் சயின்ஸ் மீது ஆர்வம் அதிகம் கொண்டவர். இதனால் முதுகலை படிப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தார்.

    பிஎச்டி பட்டம்

    பின்னர் எம்பிஏ சட்டம், பிஎச்டி படித்து முடித்தார். அமெரிக்காவில் நாசாவில் விஞ்ஞானியாக பணியாற்றும் கனவை சுமந்திருந்தார். ஜார்ஜியா நாட்டின் மிக உயரிய விருதான Order of Saint Nocholas என்ற விருது வழங்கப்பட்டது.

    ஜார்ஜியா

    ஜார்ஜியாவை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அகதியாக அருகில் உள்ள நாட்டிற்கு சென்றனர். இந்த சூழலில் அவர்களின் குழந்தைக்கு இதயத்தில் பிரச்சினை ஏற்பட்டது. அதற்கான சிகிச்சைக்காக சந்தீப்பை ஜார்ஜியா தூதரகம் தொடர்பு கொண்டது. அவர் இந்தியாவுக்கு அந்த குழந்தையை அழைத்து வந்து 3 மாதங்கள் சிகிச்சை அளிக்க உதவினார். அனைத்து செலவுகளையும் ஏற்றார். ஆனாலும் அந்த குழந்தை இறந்தது. குழந்தையை காப்பாற்ற முயற்சித்தமைக்காக ஜார்ஜியா அதிபர், சந்தீப்புக்கு இந்த விருதை வழங்கினார்.

    Advertisement

    சந்தீப்புக்கு ஆர்வம்

    அரசியல் மீது சந்தீப்புக்கு ஆர்வம் அதிகம். தந்தையிடம் சொன்ன போது அவர் மறுத்துவிட்டார். பிசினஸை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டார். இதனால் மக்களுக்கு சேவையாற்ற விஜய் தலைமையிலான தவெகவில் சந்தீப் இணைந்துள்ளார்.

    வன்னியர் வாக்குகள்

    வடதமிழகம், புதுவை ஆகியவற்றில் வன்னிய சமூகத்தினர் வாக்குகளை தவெக பக்கம் திருப்ப சந்தீப்பின் செல்வாக்கு உதவியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. வடதமிழகத்தில் வன்னியர் வாக்குகளை பாமக அறுவடை செய்து வரும் நிலையில் சந்தீப் அதை முறியடித்து தவெகவுக்கு மடைமாற்றம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நாசா கனவு

    நாசா கனவை நனவாக்க முடியாத சந்தீப், அரசியலில் வெல்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறதா என்பதையும் பார்க்க வேண்டும். தந்தையை எதிர்த்து அரசியல் செய்ய போகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது போல் எத்தனை அரசியல் வாரிசுகள் தங்கள் தாய், தந்தையை எதிர்த்து மாற்றுக் கட்சியில் இணைந்து சேவை செய்துதான் வருகிறார்கள்.

    English Summary

    Jagathratchagan son Sandeep Anand gets TVK Deputy General Secretary post. Do you know who is Sandeep Anand.