முக்குலத்தோர் வாக்குகளை பெற கயல்விழி.. நாடார் வாக்குகளை கைப்பற்ற ராக்கெட் ராஜா! சீமான் போடும் கணக்கு
சென்னை: அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் முக்குலத்தோர் சமூக வாக்குகளை கைப்பற்ற சீமானின் மனைவி கயல்விழியையும் பிரச்சாரத்தில் களமிறக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் நாடார் சமூக வாக்குகளை கைப்பற்ற ராக்கெட் ராஜா தரப்பை சீமான் அணுகி இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் நாதக சார்பாக சீமான் களமிறங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக, அதிமுக ஆதரவுடன் அம்பையில் பொது வேட்பாளராக களமிறங்க வேண்டும் என்று சீமான் விரும்புகிறார். ஆனால் திமுக மற்றும் அதிமுக இரு கட்சிகளுமே அம்பையில் தனித்து போட்டியிட ஆயத்தமாகி வருகின்றனர்.

ஒருவேளை யாரும் ஆதரிக்கவில்லை என்றால், தனித்தே களமிறங்கும் யோசனையில் சீமான் உள்ளார். சீமானின் பிடிவாதம் காரணமாக நாதகவினர் அம்பையில் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர். வீட்டுக்கு ஒரு ஓட்டு வாங்கினால், எளிதாக வெல்ல முடியும் என்று நாம் தமிழர் கட்சி கணக்கு போட்டுள்ளது. இருப்பினும் முக்குலத்தோர் சமூக வாக்குகளை கைப்பற்றுவது எப்படி என்று நாதகவினர் ஆலோசித்து வருகின்றனர்.
இதனை சீமான் முன்கூட்டியே யோசித்து வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது முக்குலத்தோர் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் பிரச்சாரக் கூட்டங்களில் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகளும், சீமானின் மனைவியுமான கயல்விழியை அதிகம் ஈடுபட வைக்கலாம் என்று கணக்கு போட்டுள்ளனர். மறுபுறம் நாடார் சமூக வாக்குகளை முழுமையாக அறுவடை செய்ய ராக்கெட் ராஜாவின் ஆதரவையும் சீமான் கோரி உள்ளதாக சொல்லப்படுகிறது.
ராக்கெட் ராஜா தரப்பும் சீமானுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற ஓப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது. அதேபோல் நாதக தரப்பில் சாட்டை துரைமுருகன் வசம் தேர்தல் பொறுப்பை கொடுக்கலாம் என்ற பேச்சுகள் அதிகரித்துள்ளன. விஜய்க்கு எதிராக கடுமையாக விமர்சித்து வரும் சாட்டை துரைமுருகனின் பிரச்சாரம் தேர்தல் நேரத்தில் நன்றாக எடுபடும் என்று நம்புகின்றனர்.
இருப்பினும் அம்பை தொகுதியில் 70 ஆயிரம் வாக்குகளை வாங்கினால் தான் சீமானால் வெற்றி பெற முடியும். திமுக, அதிம்யுக, தவெக ஆகிய 3 தரப்பும் முக்குலத்தோர் வேட்பாளர்களை களமிறக்கினால், சீமானால் தாக்கு பிடிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் இடைத்தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications
