பிளை துபாய் துணை விமானியின் அடையாளம் தெரிந்தது.. பயங்கரவாதிகளுடன் தொடர்பா? பின்னணி என்ன?

  • துபாய்: 174 பயணிகளுடன் சென்ற பிளை துபாய் விமானத்தை தரையில் மோதி அசம்பாவிதத்தை ஏற்படுத்த முயன்றதாக கூறப்படும் துணை விமானியின் அடையாளம் தெரிந்துள்ளது. இவரது பெயர் ஹமாம் அல் ஹம்மாமி என்பதும், ஓமன் நாட்டை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இவர் சமூக வலைத்தளத்தில் பயங்கரவாதிகளின் புகைப்படத்தை பகிர்ந்து இருப்பதாகவும், இதனால் அவருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது தொடர்பாகவும் தீவிர விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

    Advertisement

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே ஓமன் ஏர் நிறுவனத்தில் பயிற்சி துணை விமானியாக அவர் பணியாற்றியதும், அப்போது பயங்கரவாத சிந்தனை கொண்டவராக இருந்ததால், பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டு நிர்வாக பணிகளில் அவர் பணி அமர்த்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    Advertisement

    துணிச்சலாக செயல்பட்ட இந்திய விமானி

    துபாயில் இருந்து கடந்த 30 ஆம் தேதி இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு பிளை துபாய் நிறுவனத்திற்கு சொந்தமான எப்.இசட்.1073 (FZ1073) விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 174 பயணிகள், விமான ஊழியர்கள் என சுமார் 180 பேர் பயணம் செய்தனர்.

    விமானம் நடுவானில் சென்ற போது, விமானத்தில் துணை விமானியாக இருந்த நபர், விமானத்தின் முதன்மை விமானியாக இருந்த இந்தியாவை சேர்ந்த ஸ்மித் மச்சாரை சரமாரியாக குத்திவிட்டு விமான கட்டுப்பாட்டை எடுத்து தரையில் மோத வைக்க முயற்சி செய்துள்ளார். எனினும் துணிச்சலாக செயல்பட்ட இந்திய விமானி இந்த முயற்சியை முறியடித்தார்.

    Advertisement

    அடையாளம் தெரிந்தது

    தான் வெட்டுக் காயத்தால் படுகாயம் அடைந்தாலும் வலியையும், வேதனையையும் பொருட்படுத்தாமல் 174 பயணிகளின் உயிரை காப்பாறியாக வேண்டும் என்ற நோக்கத்துடன் துணிச்சலாக செயல்பட்டு விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். காக்பிட் அறையை திறந்து சக பயணிகள் மற்றும் ஊழியர்களின் உதவியோடு விமானத்தை அவசர அவசரமாக சவுதி அரேபியாவில் பத்திரமாக தரையிறக்கினார்.

    துணிச்சலுடன் செயல்பட்டு 174 பயணிகள் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் பிரதமர் முதல் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். கத்திக்குத்தில் பலத்த காயம் அடைந்த விமானி தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் விமானத்தை தரையில் மோதி அசம்பாவிதத்தை ஏற்படுத்த முயன்றதாக கூறப்படும் துணை விமானி யார் என்ற அடையாளம் தெரியவந்துள்ளது. இவரது பெயர் ஹமாம் அல் ஹம்மாமி என்பதும், ஓமன் நாட்டை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

    Advertisement

    பயங்கரவாதிகள் படத்தை பகிர்ந்துள்ளார்?

    அதுமட்டும் இன்றி இவர் சமூக வலைத்தளத்தில் பயங்கரவாதிகளின் புகைப்படத்தை பகிர்ந்து இருப்பதாகவும், இதனால் அவருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது தொடர்பாகவும் தீவிர விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

    கடந்த 2024 ஆம் ஆண்டு ஓமன் ஏர் நிறுவனத்தில் துணை விமானியாக பயிற்சி பெற்று வந்தபோதே ஹமாம் அல் ஹம்மாமியிடம் பயங்கரவாதக் கருத்துகள் தொடர்பான ஆவணங்கள் இருந்ததாகவும், அப்போதே அவர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டதாகவும் அமெரிக்காவின் ஏபிசி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    யார் இந்த ஹமாம் அல் ஹம்மாமி?

    மேலும் அந்த செய்தியில், இந்த சம்பவத்தின் காரணமாக ஹமாம் அல் ஹம்மாமிக்கு விமானம் ஓட்டுவதில் தடை விதிக்கப்பட்டது எனவும், பின்னர் விமானம் ஓட்டும் பணியிலிருந்து விலக்கப்பட்டதோடு நிர்வாகப் பணியில் அமர்த்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பிளைதுபாய் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து இருக்கிறார். சுமார் கடந்த 8 மாதங்களாக அவர் இந்நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.

    Advertisement

    ஏற்கனவே பாதுகாப்பு தொடர்பான சந்தேகங்கள் இருக்கும் போது அவருக்கு எப்படி விமானத்தை இயக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது? அவர் எப்படி பிளைதுபாய் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்? என்று பலரும் கேள்விகளை எழுப்பத் தொடங்கியுள்ளனர். சர்வதேச அளவில் இது விவாதமாகி இருக்கும் சூழலில் இது குறித்து ஹமாம் அல் ஹம்மாமியிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

    விமானப் பாதுகாப்பு நடைமுறைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தனவா என்பது குறித்து சம்பந்தப்பட்ட நாடுகளின் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சவுதி அரேபியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அந்த துணை விமானி விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

    English Summary

    Flydubai Co Pilot identified: The identity of the co-pilot accused of attempting to cause a disaster by crashing the Flydubai aircraft-which was carrying 174 passengers-has been revealed. He has been identified as Hamam Al Hammami, a national of Oman. Furthermore, it has come to light that he shared photographs of terrorists on social media, raising questions about potential links to terrorist groups. Intensive investigations into this matter are reportedly underway.