Low Pressure Area: வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. நெல்லை, தூத்துக்குடியில் இன்று கனமழை விளாசும்
சென்னை: வரும் 13 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், தமிழகத்தில் இன்று நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னையில் 13, 14 ஆம் தேதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வரும் 13 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்றும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 14 ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும். அடுத்த நாள் நவம்பர் 15 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.

இதனால் தமிழகத்தில் இன்று நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் இடி, மின்னலோடு கனமழை பெய்யும். கோவை, நீலகிரி, ஈரோடு, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் நாளை நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இடி, மின்னலோடு கனமழை பெய்யும். சென்னையில் வரும் 13, 14 ஆம் தேதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications
