புதுச்சேரி பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்தில் மீன்? அமைச்சர் சொன்ன சேதி.. பாஜக ஆதரிக்குமா?

  • புதுச்சேரி: புதுச்சேரி அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவுடன் மீன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் பாஜக ஆதரவுடன் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் நிலையில், அரசின் இந்த முயற்சிக்கு பாஜக எதிர்ப்பு தெரிவிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    Advertisement

    புதுச்சேரி பொதுப்பணி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவை, கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் ஜவகர் இன்று சந்தித்து பேசினார். அப்போது புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் மீன் வளங்களைப் பெருக்கி அதன் மூலம் ஏற்றுமதி, வேலைவாய்ப்புகள், மீன் தொடர்புடைய தொழில்கள் தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    Advertisement

    புதுச்சேரி பிராந்தியத்தில் பாகூர் பகுதி மற்றும் காரைக்கால் பிராந்தியத்தில் போலகம் தொழிற்பேட்டையில் மீன்வள பூங்கா அமைத்திடவும், ஏனாம் பிராந்தியத்தில் கல் நண்டு வளர்ப்பு முறையினை மேம்படுத்திடவும் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆலோசனை வழங்கினார். இந்த திட்டங்களுக்கு ஆணையம் தக்க நிதியுதவி அளித்திடும் என்றும் தெரிவித்தார்.

    இந்தியாவில் முதன் முதலாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவினை மீன்களுடன் சேர்த்து வழங்கிட புதுச்சேரி மற்றும் ஏனாம் பிராந்தியத்தில் ஒரு பள்ளியில் பரீட்சார்த்த முறையில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தெரிவித்தார்.

    Advertisement

    புதுச்சேரியில் பாஜக ஆதரவுடன் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் நிலையில், தற்போது, என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ், பள்ளிகளில் மாணவர்களுக்கு மீன் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த முயற்சிக்கு, கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் பாஜக எதிர்ப்பு தெரிவிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜகவைச் சேர்ந்த புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் கீழ்தான், கல்வித்துறை வருகிறது.

    மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்த நிலையில், முதன்முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்தது. பாஜக அரசு மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சிக்கு வந்ததும், பள்ளி மதிய உணவுத் தயாரிப்பில் இருந்து முட்டைகளை நீக்குவதாக அறிவித்தது. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Minister Malladi Krishna Rao has announced that measures will be taken to provide fish along with the midday meal to students studying in Puducherry government schools. With the NR Congress currently governing Puducherry with BJP support, the question arises as to whether the BJP will oppose this government initiative.