சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.. கோபம் கண்ணை மறைக்கவும், மனைவியின் தலைமுடியைப் பிடித்து தெருவுக்குள் இழுத்து சென்று, கண்மூடித்தனமாக தாக்கி உள்ளார் கணவர்.. அடுத்த சில நிமிடங்களிலேயே இப்படியொரு கொடுமை கோட்டையூரில் நடந்துள்ளது.. இது தொடர்பான விசாரணைம் நடந்து வருகிறது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ளது கோட்டையூர்.. இங்கு வசித்து வருகிறார் பிரகாஷ் 37 வயதாகிறது.. இவர் பந்தல் மற்றும் கொட்டகை போடும் தொழில் செய்து வந்தார்.
அதேபோல, சாக்கோட்டை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் உய்யவந்தாள்.. வயது 40.. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது.. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரைப் பிரிந்து விட்டார்.. அதனால் பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்தார். வாழ்வாதாரத்துக்காக தென்னை ஓலை பின்னும் தொழிலை உய்யவந்தாள் செய்து வந்தார். கொட்டகை போடும் தொழில் நிமித்தமாக தென்னை ஓலைகளை வாங்குவதற்காக பிரகாஷ் அடிக்கடி உய்யவந்தாளின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அப்போதுதான் 2 பேருக்கும் இடையே நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளது.. அது நாளடைவில் காதலாக மலர்ந்தது. இதையடுத்து, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிரகாசும் உய்யவந்தாளும் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு சென்னைக்கு சென்று சில காலம் வசித்த இவர்கள், பிறகு மறுபடியும் சாக்கோட்டை பகுதிக்கு வந்து தங்களது தொழிலைத் தொடர்ந்து செய்து வந்தனர். திருமணமாகி 6 மாதங்களே ஆன நிலையில், கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பப் பிரச்சினை வலுத்து வந்தது.. இதனால் தினம் தினம் தகராறும் வெடித்து ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்றும் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் வெடித்தது. இதில் ஆத்திரத்தின் எல்லைக்கே சென்ற பிரகாஷ், மனைவி உய்யவந்தாளைக் கண்மூடித்தனமாக தாக்க தொடங்கினார். ஆனால், ஆத்திரம் அடங்காத பிரகாஷ் அவரை விடாமல் துரத்திச் சென்று பிடித்தார். தெருவிலேயே உய்யவந்தாளின் தலைமுடியை பிடித்து, வீட்டிற்குத் தரதரவென இழுத்து சென்றார். அப்படி இழுத்துச் சென்றபோது, எதிர்பாராதவிதமாக அங்கிருந்த ஒரு கல் தூணில் உய்யவந்தாளின் தலை பலமாக மோதியது. இதில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.. அங்கேயே மயங்கியும் விழுந்து விட்டார்.. இதை பார்த்து பதற்றமடைந்த பிரகாஷ், உடனடியாக அவரது முகத்தில் தண்ணீரைத் தெளித்து எழுப்ப முயன்றார். ஆனால், உய்யவந்தாள் எழவில்லை.. அப்படியே அவரது உயிர் போய்விட்டது. மனைவி இறந்துவிட்டதை உறுதி செய்த பிரகாஷ், அவரது உடலை வீட்டிற்குள் எடுத்துச்சென்று கிடத்தினார்.. உடலின் மீது ஒரு போர்வையைப் போர்த்தி சடலத்தை மூடி வைத்தார்.. பிறகு அங்கிருந்து நேராக காரைக்குடி வடக்கு ஸ்டேஷனுக்கு சென்று நடந்த விபரங்களைக் கூறி சரணடைந்தார். இதையடுத்து போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உய்யவந்தாளின் உடலைக் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் பிரகாஷையும் கைது செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள். தென்னை ஓலைகளை வாங்க வரும்போது மலர்ந்த காதல், திருமணத்தில் முடிந்து, இன்று கட்டுக்கடங்காத கோபத்தினால் ஒரு உயிரையே காவு வாங்கி விட்டது.. இந்த சம்பவம் காரைக்குடியில அதிர்ச்சியை தந்து வருகிறது..!!சிவகங்கை தம்பதி
காரைக்குடி உய்யவந்தாள்
இதனால் வலி தாங்க முடியாத உய்யவந்தாள், உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தெருவுக்கு ஓடினார்.கல் தூணில் உடைந்த மண்டை
போர்வையை போர்த்தி..